High Interest FD - Fixed Deposit களுக்கு கிட்டத்தட்ட 9.5% வரை வட்டி வழங்கும் நிறுவனம் குறித்தும் அதை எவ்வாறு ஆன்லைனில் பதிவு செய்வது என்பது குறித்தும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பொதுவாகவே சேமிப்பு என்பது இந்த காலத்தில் மிக மிக அவசியம் ஆன ஒன்றாக இருக்கிறது, தினம் தினம் நான் பயன்படுத்துகின்ற அனைத்துமே விலை ஏறிக் கொண்டே போகிறது, இதற்கிடையில் நிச்சயம் சேமிப்பிற்கு என்று தனியாக ஒதுக்கி வைத்தல் நிச்சயம் அவசியம் ஆகிறது, ஏதாவது ஒரு அவசர காலங்களில் அந்த சேமிப்பு என்பது நம்மையும் நம் குடும்பத்தையும் பொருளாதார வீழ்ச்சிகளுக்குள் விழாமல் காத்திடும்.
சும்மா கையில் சேமிப்பது என்பது ஆகச்சிறந்த சேமிப்பாக இருக்காது, அது செலவுகளுக்கு மட்டுமே வழி வகுக்கும், உங்களிடம் ஒரு 10 இலட்சம் ஏதோ வியாபார இலாபமாகவோ, இல்லை பென்ஷன் பணமாகவோ இருக்கிறது என்றால் அதை அப்படியே கையிலேயே வைத்து இருப்பதில் என்ன பயன் இருக்க போகிறது, அதை குறைந்த காலத்திற்கு வங்கிகளில் நிலையான வைப்பு தொகையாக போட்டு வைக்கலாம்.
சரி அப்படி குறைந்த கால வைப்புத் தொகையாக அதிக வட்டி தரும் ஏதாவது நிறுவனம் இருக்கிறதா என்றால், நிச்சயம் இருக்கிறது ஏர்டெல் பைனான்ஸ் நிறுவனம் ஒரு வருட கால வைப்பு தொகைக்கு எந்த வங்கிகளும் தராத அளவிற்கு 9.1% - 9.5% வரை வட்டி வழங்குகிறது, அது மட்டும் அல்லாமல் இந்த வைப்பு தொகையை செலுத்த நீங்கள் வங்கள் எல்லாம் செல்ல தேவை இல்லை ஆன்லைனிலேயே பதிவு செய்யலாம்.
Airtel Thanks செயலி உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து கொண்டு, அதில் Finance செக்சனில் Fixed Deposit என்ற ஆப்சனை க்ளிக் செய்து, பான், ஆதார், செல்ஃபி, கையெழுத்து, பேங்க் அக்கவுண்ட் உள்ளிட்டவைகளை பதிவு செய்து, உங்களது பணத்தை ட்ரான்ஸ்பர் செய்தால் போதும் FD கிரியேட் ஆகி விடும், நீங்கள் அங்கும் இங்குமாக அலைந்து பாண்ட் எல்லாம் வாங்க அவசியம் இல்லை.