Lakpati Didi Yojana Details In Tamil - மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் பெண்களை மையப்படுத்தி மத்திய அரசு புதிய வட்டியில்லா கடன் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது, அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Lakpati Didi Yojana Details In Tamil - லக்பதி திதி யோஜனா என்பது குறைந்த சம்பாத்தியம் கொண்ட ஊரக பெண்களை பொருளாதார ரீதியாக முன்னேற்றும் வகையில், மத்திய அரசு வழங்கும் கடனுதவி திட்டம் ஆகும், இத்திட்டத்தின் கீழ் இணைய இருக்கும் பெண்களுக்கு அரசு பொதுத்துறை வங்கிகளின் மூலம் ரூபாய் 5 இலட்சம் வரை வட்டி இல்லா கடன் ஆக கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சரி, இத்திட்டத்தில் எப்படி இணைவது?
1) இத்திட்டத்தின் கீழ் பலன் பெற நினைப்பவர்கள் நிச்சயம் இந்தியாவில் இருக்கும் ஏதாவது ஒரு மகளிர் சுய உதவிக் குழுக்களின் கீழ் ஒரு மெம்பராக இருக்க வேண்டியது அவசியம்.
2) இதற்கு முன் மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலம் வாங்கிய லோன்களை சரி வர அடைத்து இருக்க வேண்டும்.
3) அவ்வாறாக எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் உங்களது மகளிர் சுய உதவிக்குழு கார்டை எடுத்துக் கொண்டு நேரடியாக பொதுத்துறை வங்கிகளுக்கு சென்று, திட்டத்திற்கான படிவத்தை கேட்டு பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
4) அவர்கள் உங்களது வரவு செலவுகளை சரியாக பார்த்து விட்டு உங்களது லோனுக்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பார்கள்.
தேவையான ஆவணங்கள் என்ன என்ன?
1) ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு
2) முக்கியமாக மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர் கார்டு
3) இருப்பிடச்சான்றிதழ்
4) உங்களது வருமானம் தனியாக வருடத்திற்கு ஒரு இலட்சம் இருக்கும் வகையில் ஒரு வருமானச்சான்றிதழ்
5) இத்தோடு வங்கிகள் கொடுக்கும் லக்பதி திதி யோஜனாவின் பூர்த்தி செய்யப்பட்ட படிவம்
" அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கும் பட்சத்தில் வங்கிகளின் மூலம் கிட்ட தட்ட ஒரு வாரத்தில் நீங்கள் கேட்க கூடிய லோன் என்பது உங்களுடைய கணக்கில் வரவு வைக்கப்படும், நீங்கள் ஒரு குறிப்பிட்ட மாத தவணை மூலம் அசலை மட்டும் திருப்பி செலுத்தினால் போதும், ஆனால் ஒரு சில வங்கிகள் பணத்திற்கு சிறிதளவு வட்டிகளும் விதிக்கின்றன "