மத்திய அரசு தொடர்ந்து விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கி வருகிறது
மத்திய அரசு தொடர்ந்து விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கி வருகிறது. கடந்த பட்ஜெட்களைப் போன்று, இந்த ஆண்டும் விவசாய துறைக்கு பல முக்கிய அறிவிப்புகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில்,
*கிசான் கிரெடிட் கார்டு (KCC) வரம்பு உயர்த்தல்
*விவசாய பொருட்களுக்கான ஜிஎஸ்டி (GST) குறைத்தல்
விவசாயத்திற்கான மொத்த ஒதுக்கீடுகளை அதிகரித்தல் போன்ற அறிவிப்புகள் இடம்பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
விவசாயிகள், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்பு தொழில் செய்பவர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் கிசான் கிரெடிட் கார்டு (KCC) திட்டத்தில் முக்கிய மாற்றம் செய்யப்படலாம்.
தற்போது ரூ.3 லட்சமாக உள்ள கடன் வரம்பு, ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது விவசாயிகளின் முதலீட்டு திறனை அதிகரிக்க, மேலும் பல தொழில்களுக்கான வசதியை ஏற்படுத்த உதவும்.