Kandankathiri Health Benefits - சாலையில் சாதாரணமாக கிடக்கும் கண்டங்கத்திரியில் இருக்கும் மருத்துவ பயன்கள் குறித்து இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம்.
பொதுவாகவே தாவர உலகம் என்பது பல அதிசயங்கள் மிகுந்தது, நம் உடல் சமநிலையை ஒரு செடியால் ஒரு இலையால், ஒரு பூவால், ஒரு வேரால் தர முடிகிறது என்றால் மனிதனுக்கும் தாவரத்திற்கும் இடையில் பல யுகங்களாக ஒரு தொடர்பு இருந்து கொண்டே இருந்திருக்கிறது என்பது தானே அர்த்தம், அந்த தொடர்புகள் தான் ஆயுர்வேதம், சித்தா உள்ளிட்டவைகள் உருவாகவும் காரணமாக இருந்து இருக்கும்.
அந்த வகையில் கண்டங்கத்திரி என்னும் ஆயுர்வேத அதிசயம் குறித்து இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம், கண்டங்கத்திரி காய்ச்சல், சளி, இருமல், நுரையீரல் காய்ச்சல் உள்ளிட்ட அனைத்து சுரங்களையும் நீக்கும் ஆற்றல் கொண்டது. கண்டங்கத்திரி இலைச்சாற்றுடன் நல்லெண்ணெய் கலந்து காய்ச்சிப் பூசிவர தலைவலி, மூட்டுவலி முதலியவை நீங்கும்.
கண்டங்கத்திரி பழத்தை உலர்த்தி, நெருப்பில் சுட்டு, பொடியாக்கி, ஆடாதோடை இலைகளில் வைத்து சுருட்டி, புகைபோல பிடித்தால், பல்வலி நீங்கும், கண்டங்கத்திரி இலைச்சாற்றுடன் ஆளிவிதை நெய் சேர்த்துக் காய்ச்சி வெடிப்புகளில் பூசி வந்தால் வெடிப்பு மறையும். கண்டங்கத்திரியின் வேர், ஆஸ்துமா முதலான கப நோய்களுக்கான குடிநீர், சூரணம் மற்றும் லேகியங்களில் சேர்க்கப்படுகிறது.
கண்டங்கத்திரி பழங்கள் மற்றும் தண்டுகள் நுண்ணுயிர்களை எதிர்க்கும் மருத்துவ பண்பு கொண்டவை. கண்டங்கத்திரி மூலிகையை எரித்து சாம்பலாக்கி, சித்த மருந்துகளில் புகழ் பெற்ற, பத்து வகையான மூலிகைகளின் வேர்களைக் கொண்டு தயாரிக்கப்படும் 'தச மூலம்' என்ற மூலிகைகளில் சேர்க்கப்படும் மிக முக்கிய மூலப்பொருள்களுள் கண்டங்கத்தரியும் ஒன்றாகும்.
" அந்த வகையில் இவ்வளவு உடல் நோய்களுக்கு மருந்தாகும் கண்டங்கத்திரி என்பது உண்மையாகவே ஆயுர்வேதம் மற்றும் சித்தாவில் ஒரு ஆகச்சிறந்த மூலிகை அதிசயம் தான் "