கல்யாண் ஜுவல்லர்ஸ் உரிமையாளரான கல்யாணராமனின் வளர்ச்சி இந்தியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அவர் T.S. கல்யாணமாறன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்.மேலும்,அவர் இந்தியாவின் மிகவும் திறமையான நகை வியாபாரிகளில் ஒருவராக இருந்து வருகிறார்.
அவர் 12வது வயதில் தந்தையுடன் கடையில் உதவி செய்ய ஆரம்பித்தார். பிறகு, வேறு இடங்களில் வேலை செய்து 25 லட்சம் ரூபாய் சேமித்து, நகைக்கடை திறக்க நினைத்தார். ஆனால், தன்னுடைய கனவை உருவாக்க கிட்டத்தட்ட ரூ.50 லட்சம் கடன் வாங்க வேண்டும் என்று முடிவு செய்தார்.
இப்போது, கேரளாவின் ஒரு சிறிய நகரிலிருந்து வந்த கல்யாணராமன்,ரூ.17,000 கோடிக்கு மேல் மதிப்புடைய தனது தொழிலை வெற்றிகரமாக வளர்த்து சிறப்பாக நடத்தி வருகிறார்.