தற்போது தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் மாணவர் சேர்க்கை நிலையான வளர்ச்சியை கண்டுவருகிறது
தற்போது தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் மாணவர் சேர்க்கை நிலையான வளர்ச்சியை கண்டுவருகிறது. இந்த ஆண்டும் இன்ஜினியரிங் படிப்புகளுக்கு மாணவர்களின் ஆர்வம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு வேலை வாய்ப்பு இருக்கிறதா? இல்லையா? என்பது தொடர்பாக பார்க்கலாம் வாங்க..
இதற்கிடையில், கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையின் எதிர்காலம் எப்படி இருக்கும்? என்ற கேள்விக்கு கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி தனது யூடியூப் வீடியோவில் விளக்கம் அளித்துள்ளார்.
அதன்படி, தகவல் தொழில்நுட்ப துறையில் (IT) எதிர்காலம் உறுதியானதாக உள்ளதால், இதற்கான படிப்புகளை தேர்வு செய்வது சிறந்த முடிவாக இருக்கும். தற்போது 2 மில்லியனுக்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் இந்தத் துறையில் உள்ளதாக கூறப்படுகிறது.
க்ளவுட் கம்ப்யூட்டிங், குவாண்டம் கம்ப்யூட்டிங், ஆர்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ், மெஷின் லெர்னிங், சைபர் செக்யூரிட்டி போன்ற பல துறைகளில் அதிக வேலை வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. எனவே, இந்தத் துறையில் சாதிக்க மட்டுமே அல்ல, முன்னணியில் நிற்கவும், கோடிங் திறனுடன் பிற தொழில்நுட்பத் திறன்களையும் அபிவிருத்தி செய்துகொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.