சமீபகாலமாக ஜியோ, ஏர்டெல், வோடாபோன் போன்ற நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்திவிட்டனர்.
சமீபகாலமாக ஜியோ, ஏர்டெல், வோடாபோன் போன்ற நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்திவிட்டனர். இந்த விஷயம் மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இப்படி இருக்கும் சூழல் மீண்டும் ஜியோ ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தற்போது ஜியோ போஸ்ட்பெய்டு பேஸிக் ரீசார்ஜ் திட்டத்தின் விலையை ரூ.100 உயர்ர்தி இருக்கிறது. இந்த ரீசார்ஜ் திட்டம் ஜனவரி 23 முதல் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
அதாவது ரூ.199 திட்டம் இனி ரூ.299 கட்டணமாக மாறியுள்ளது. ஜனவரி 23 முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என்று BT இன் அறிக்கை தெரிவிக்கிறது. இப்படி ரீசார்ஜ் கட்டணத்தை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பலரும் BSNL நிறுவனத்திற்கு மாறி வருகின்றனர்.