Jay Chaudhry Net Worth-வறுமையை தாண்டி ரூ.96,960 கோடி மதிப்பீட்டுள்ள கோடீஸ்வர் ஜெய் சௌத்ரியின் பயணத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதியின்றி வளர்ந்த நிலையில், இன்று ரூ.96,960 கோடியின் நிகர மதிப்புடைய கோடீஸ்வரராகிய ஜெய் சௌத்ரியின் சாதனைகள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் இருகின்றன. 2008-ல் உருவாக்கப்பட்ட பிரபல கிளவுட் செக்யூரிட்டி நிறுவனம், Zscaler-இன் CEO எனும் பதவியில் உள்ளார்.
ஃபோர்ப்ஸ் வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில், ஜூலை 16-ம் தேதி நிலவரப்படி, அவரது நிகர மதிப்பு 11.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.96,960 கோடியாக மதிப்பிட படுகிறது. இவர் மற்றும் அவரது குடும்பத்தினர் Zscaler-இன் 40 சதவீத பங்குகளை வைத்துள்ளனர், இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 30.91 பில்லியன் ஆகும்.
ஜெய் சௌத்ரி, ஹிமாச்சல பிரதேசத்தின் உனா மாவட்டத்தில் உள்ள பனோஹ் கிராமத்தில் பிறந்தவர். 8-ம் வகுப்பில் இருந்து 10-ம் வகுப்பு வரை மின்சாரம் மற்றும் தண்ணீர் இல்லாமல் வாழ்ந்து வளர்ந்தவர்.மேலும், அவர் குடும்பத்தில் மூன்றாவது இளைய மகனாக பிறந்து வளர்ந்தவர்.