• India
```

உலக அளவில் மீண்டும் மாபெரும் சாதனையை படைத்த ISRO!!

ISRO new achievement

By Dhiviyaraj

Published on:  2025-01-17 10:11:50  |    59

இந்திய நாட்டின் முதல் விண்வெளி இணைப்புப் பரிசோதனையான ஸ்பேடெக்ஸ் வெற்றிகரமாக நிறைவடைந்து பெரும் சாதனையை படைத்து இருக்கிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) 2024 டிசம்பர் 30 அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து PSLV-C60 ராக்கெட் மூலம் SPADEx (Space Docking Experiment) செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது. இந்த செயற்கைக்கோளுக்கு STX-01 – சேஸர், STX-02 – டார்கெட் என்று பெயர் வைத்துள்ளனர். 


முதலில் திட்டமிட்ட தேதி ஜனவரி 6 ஆனால் சில தொழில்நுட்ப காரணங்களால் ஜனவரி 9க்கு மாற்றப்பட்டது.  225 மீட்டர் தூரம் குறைக்கும் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் ஒத்திவைப்பு.

ஜனவரி 11 அன்று மூன்றாவது முயற்சி வெற்றிகரமாக நடந்தது. 500 மீட்டர் > 230 மீட்டர் > 105 மீட்டர் > 15 மீட்டர் > 3 மீட்டர் வரை செயற்கைக்கோள்கள் அருகே கொண்டுவரப்பட்டன. மூன்றாவது முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டது. 

இன்று காலை, SPADEx விண்வெளி இணைப்புப் பரிசோதனை முழுமையாக வெற்றிகரமாக முடிவடைந்தது. இது இந்தியாவின் விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சியில் மைல்கல் என மதிப்பீடு செய்யப்படுகிறது.