• India
```

150 கி.மீ. வரையிலான பயணங்களுக்கு சிறந்த சலுகை.. குழந்தைகளுக்கு பாதி விலை! ரயில் சீசன் டிக்கெட் வந்தாச்சு!

IRCTC Latest News Today | IRCTC Today's News

IRCTC Latest News Today -இந்தியாவில் தினசரி பயணிகளை இலக்காகக் கொண்டு ரயில்வே வழங்கும் சீசன் டிக்கெட் சலுகை மூலம் ஒரே டிக்கெட்டில் ஒரு மாதம், அல்லது நீண்டகாலம் பயணிக்கலாம். இது குறைந்த செலவில் பயணச்சலவைக் குறைக்கும் சிறந்த வாய்ப்பாகும்.

இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில்களில் பயணிக்கின்றனர், ஆனால் ரயில்வே வழங்கும் பல சலுகைகள் குறித்து எல்லோருக்கும் முழுமையாகத் தெரியாது. குறிப்பாக, *சீசன் டிக்கெட்* பற்றி பலர் அறியாமல் உள்ளனர். இந்த டிக்கெட், குறிப்பாக தினசரி பயணிகளை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட சலுகையாகும், இதை ஒருமுறை வாங்கினால் ஒரு வாரம், ஒரு மாதம், அல்லது ஒரு வருடம் வரை பயணிக்க முடியும்.

சீசன் டிக்கெட் என்பது பயணிகளுக்கான குறைந்த செலவில் தொடர்ந்து பயணிக்க உதவும் ஒரே முறையான டிக்கெட் ஆகும். இதனை வாங்கிய பயணிகள், டிக்கெட் வாங்கும் தொல்லை இல்லாமல், தங்கள் குறிப்பிட்ட வழித்தடத்தில் குறிப்பிட்ட காலத்திற்கு செல்லலாம். ஒரு முறை பணம் செலுத்துவதன் மூலம், தினசரி டிக்கெட் வாங்குவதற்கான நேரத்தையும் பணத்தையும் சேமிக்க முடியும். 





இந்த சீசன் டிக்கெட் 150 கிலோ மீட்டர் வரையிலான பயணங்களுக்கு வழங்கப்படுகின்றது, இது பஸ் பாஸ் போல செயல்படுகிறது. இது பயணிக்கும் தூரத்தைப் பொறுத்து கட்டணம் மாறுபடும். மேலும், குழந்தைகளுக்கான சீசன் டிக்கெட் பெரியவர்களின் விலையைவிட பாதி விலையில் கிடைக்கிறது. இந்த சிறந்த சலுகையை பயணிகள் ரயில் நிலையத்தில் விண்ணப்பித்து பெறலாம்.

Harmful Effects of Drinking Coca Cola
Information

Harmful Effects of Drinking Coca Cola