• India
```

இந்த நாடுகளில் எல்லாம்...ரூபாயோட மதிப்பு டாப்ல இருக்குமாம்...எந்தெந்த நாடுகள்னு தெரிஞ்சிக்கலாம் வாங்க...!

INR VS Currency

By Ramesh

Published on:  2025-02-26 00:00:32  |    381

INR VS Global Currency - நம் நாட்டின் ரூபாயின் மதிப்பு ஒரு சில நாடுகளில் அதிகமாக இருக்கும், அது எந்த எந்த நாடுகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பொதுவாக ஒரு நாட்டின் பொருளாதார சூழலை பொருத்து அந்த நாட்டின் நாணயத்தின் மதிப்பு என்பது இருக்கும், பொதுவாகவே உலகளாவிய வர்த்தகங்கள் அனைத்தும் அமெரிக்க டாலரில் நடப்பதால் அமெரிக்க டாலரின் மதிப்பு என்றுமே சரிவதில்லை, ரூபாய்க்கு எதிராக அதிக மதிப்பை கொண்ட நாட்டின் பணம் என்றால் குவைத் நாட்டின் Dinar யை சொல்லலாம்.

ஒரு தினார் என்பது இந்திய மதிப்பு 280.56 ரூபாயாக இருப்பதாக தகவல், சரி நம் நாட்டு கரன்ஸ்சியை விட குவைத், அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளின் கரன்ஸி அதிக மதிப்பை கொண்டு இருக்கிறது, இது போல நம் நாட்டின் பணம் வேறு எங்கிலாவது அதிக மதிப்பை கொண்டு இருக்குமா என்றால் ஆம் நிச்சயம் கொண்டு இருக்கும்.

இந்தியாவின் ஒரு ரூபாய் மதிப்பு என்பது வியட்நாமில் 293.05 Vietnamese Dong யிற்கு சமம், இந்தோனேசியாவில் 187.48 IDR க்கு சமம், உஸ்பெகிஸ்தானில் 147.94 Uzbekistani Som க்கு சமம், பராகுவேயில் 90.71 Paraguayan Guarani க்கு சமம், கம்போடியா நாட்டில் 45.97 Cambodian Riel க்கு சமம், மங்கோலியாவில் 38.967 Mongolian Tugrik க்கு சமம், தான்சானியாவில் 30.01 Tanzanian Shilling க்கு சமம், 

சிலே நாட்டில் நமது ஒரு ரூபாய் என்பது 10.81 Chilean Pesos க்கு சமம், இலங்கை நாட்டில் நமது ஒரு ரூபாய் என்பது 3.39 Sri Lankan Rupees ஆக இருக்கிறது, ஆகவே இது போல இந்திய ரூபாயும் ஒரு சில நாடுகளில் மதிப்பு என்பது கூட தான் இருக்கிறது, இனிமேல் டூர் எங்கயாச்சு போகனும்னா இப்படி ஒரு நாட்ட பாத்து வச்சிக்கிட்டா   அங்க போய் செலவு பண்றதுக்கு ஈசியா இருக்கும்.

Harmful Effects of Drinking Coca Cola
Information

Harmful Effects of Drinking Coca Cola