Indian Railway Cuts Unreserved Coaches to Two - தேசம் முழுக்க முன்பதிவில்லா பெட்டிகள் ரயிலில் குறைக்கப்படுவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது, அதன் உண்மைத்தன்மை குறித்து பார்க்கலாம்.
உலகின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் ஆக அறியப்படும் இந்திய ரயில்வே, இந்தியர்கள் தேசத்திற்குள் பயணிக்க மிக எளிதான, ஸ்மார்ட்டான, மலிவான போக்குவரத்து அம்சமாக பார்க்கப்படுகிறது, பொதுவாக அனைத்து ரயில்களிலும் பெட்டிகள் ஆனது முன்பதிவில்லா பெட்டிகள், ஸ்லீப்பர் பெட்டிகள், ஏசி பெட்டிகள் என வகைப்படுத்தப்பட்டு இருக்கும்.
ஒரு சில அந்தியோதயா, வந்தே பாரத் ரயில்கள் முழுவதும் சீட்டர்களாக செயல்பட்டு வருகின்றன, சரி தற்போது இதில் என்ன பிரச்சினை என்றால், இணையத்தில் ஒரு நியூஸ் வைரல் ஆகி வந்து கொண்டு இருந்தது, அதாவது இந்திய ரயில்வே முன்பதிவில்லா பெட்டிகளை நான்கில் இருந்து இரண்டாக தேசம் முழுக்க குறைக்க இருப்பதாகவும் அதற்கு பதில் ஏசி கோச்சை இணைக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.
அது சமூக வலைதளங்களில் மட்டும் பரவாமல் ஒரு சில அதிகாரப்பூர்வ நியூஸ் சேனல்களும் நியூஸ் ஆக வெளியிட்டதால், செய்தியில் உண்மை இருக்குமென இணையதளவாசிகள், அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர், ஆனால் ரயில்வே துறையோ இந்த செய்தியை முற்றிலுமாக மறுத்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.
ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் நான்கில் இருந்து இரண்டாக குறைப்பு என்ற நடவடிக்கையோ தகவலோ, ஏதும் ரயில்வே துறையால் அறிவிக்கப்படவில்லை, சீட்டர் பெட்டிகளை அதிகரிப்பது குறித்து தான் பேசப்பட்டு இருக்கிறது, மார்ச் மாதத்தில் இருந்து பெட்டிகள் அதிகரிப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என இந்திய ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.