ஜனவரி 20ஆம் தேதி, அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார்.
ஜனவரி 20ஆம் தேதி, அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். பதவியேற்ற முதல் நாளிலேயே, அவர் 78 முக்கிய கொள்கை முடிவுகளை அறிவித்தார். இதில் சட்டவிரோத குடியேற்றங்களை கட்டுப்படுத்துவது முக்கிய தீர்மானமாக இருக்கிறது.
அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்ற நிலை
அமெரிக்க அரசின் தரவுகளின்படி, 4.78 கோடி பேர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியுள்ளனர். மெக்ஸிகோ - 1 கோடியே மேற்பட்டோர்
இந்தியா - 28 லட்சம் பேர்
சீனா - 22 லட்சம் பேர்
பிலிப்பைன்ஸ் & எல் சல்வடார் - தலா 14 லட்சம் பேர்
ட்ரம்ப் அரசின் நடவடிக்கைகள்
குற்ற பின்னணி உள்ள சட்டவிரோத குடியேறிவர்களை கைது செய்து சிறையில் அடைக்கும் உத்தரவு. தற்போது முதற்கட்டமாக 15 லட்சம் பேரின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவரவரது நாடுகளுக்கு விரைவில் நாடு கடத்த நடவடிக்கை. இந்தியாவைச் சேர்ந்த 18,000 பேர் நாடு திரும்ப உள்ளனர், இதற்கு இந்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.