முன்னதாக, வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவேண்டிய காலக்கெடு டிசம்பர் 31 ஆக இருந்த நிலையில், இதற்கான அவகாசத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) நீட்டித்துள்ளது. இது வரி செலுத்துவோருக்கு பெரும் நிவாரணமாகும்.
இந்த நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்தை பயன்படுத்தி உங்கள் வரி கணக்கை தவறாமல் தாக்கல் செய்யவும். ஏற்கனவே தாக்கல் செய்த தகவலில் பிழைகள் இருந்தால் அவற்றை திருத்தும் வாய்ப்பு தற்போது உங்களுக்குக் கிடைத்துள்ளது.
வருமான வரி கணக்கை குறிப்பிட்ட நேரத்துக்குள் தாக்கல் செய்ய தவறினால், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 139(4) இன் கீழ் அபராதம் விதிக்கப்படும்.
உங்கள் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால், ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்.ரூ.5 லட்சத்துக்கு குறைவாக இருந்தால், ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டி இருக்கும்.
1️⃣ இ-ஃபைலிங் போர்ட்டல் (https://www.incometax.gov.in) மூலம் உள்நுழையவும்.
2️⃣ 'இ-ஃபைல்' ஆப்ஷனை கிளிக் செய்து 'File Income Tax Return' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
3️⃣ 2024-25 மதிப்பீட்டு ஆண்டை தேர்ந்தெடுக்கவும்.
4️⃣ 'ஆன்லைன் தாக்கல் செய்யும் முறை' என்பதைத் தேர்வு செய்யவும்.
5️⃣ 'புதிய தாக்கல் தொடங்கு' பொத்தானை கிளிக் செய்யவும்.
6️⃣ உங்களுக்கு பொருந்தக்கூடிய ITR படிவத்தை தேர்ந்தெடுத்து தாக்கல் செய்ய தொடங்கவும்.
7️⃣ 'தனிப்பட்ட தகவல்' பிரிவில் உள்ள விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்யவும்.
8️⃣ பொருந்தும் பிரிவு 139(4)-ஐ தேர்வுசெய்து, விவரங்களை பூர்த்தி செய்யவும்.
9️⃣ உங்கள் வரி விவரங்களை சரிபார்த்த பிறகு தேவையான கட்டணங்களை செலுத்தி தாக்கல் செய்யவும்.