• India
```

5 லட்ச வருமானத்திற்கும் குறைவாக பெறுபவரா நீங்கள்?அப்போ உங்களுக்கு ரூ.1,000 அபராதம் !

Income Tax Latest News Today | Punishment For Not Paying Income Tax

Income Tax Latest News Today -வருமான வரியை குறித்த திகதியில் செலுத்தவில்லை என்றால் விதிக்கப்படும் அபராதங்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

Income Tax Latest News Today -வருமான வரி செலுத்த தவறினால் அபராதம் செலுத்த நேரிடும்.தற்பொழுது அபராதம் மற்றும் அதன் விவரங்கள் பற்றி பார்க்கலாம்.

தனி நபர்கள், நிறுவனங்கள் மற்றும் பிற வரி செலுத்துவோர் ஒவ்வொரு ஆண்டும் சரியாக வருமான வரியை செலுத்துவது கட்டாயமாக இருந்து வருகிறது. 

மத்திய அரசு வருமான வரி செலுத்துவதற்கான காலக்கெட்டுகளை நிர்ணயித்துள்ளது. இவற்றின் அடிப்படையில், சரியான நேரத்தில் வருமான வரியை செலுத்தாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

மாத சம்பளம் பெறுபவர்களுக்கு ஜூலை 31, 2024 க்குள் வருமான வரியை செலுத்த வேண்டிய கட்டாயம் இருந்து வருகிறது.அடுத்ததாக, தணிக்கை செய்யப்பட வேண்டிய கணக்குகள் அக்டோபர் 31க்கு முன்பு தாக்கல் செய்ய வேண்டும்.மேலும், பிரிவு 92 இ ன் கீழ் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியவர்களுக்கு நவம்பர் 30 வரை அனுமதி உள்ளது. அனைத்துத் தரப்பிற்கும் தாமதமாக ஐடிஆர் தாக்கலுக்கான கடைசி தேதி டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி ஆகும்.


வருமான வரியை செலுத்த தவறியவர்களுக்கு அபராதங்கள் விதிக்கப்படும். அபராதங்களை பார்க்கலாம்.

திகதிக்கு பிறகு வரியை செலுத்தாதவர்கள் அபராதம் விதிக்கப்படுவார்கள். வரி செலுத்துபவர்கள், கட்டணம் அல்லது அபராதம் செலுத்துவதோடு மட்டுமல்ல, மற்ற பல சலுகைகளையும் இழக்கிறார்கள். நிலுவைத் தேதிக்கு பிறகு ஐடிஆர் தாக்கல் செய்தாலும், அபராதம் கட்ட வேண்டியிருக்கிறது.


தாமதமாக ஐடிஆர் தாக்கல் செய்தால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்.மேலும், ரூ.5 லட்சத்திற்கும் குறைவான வருமானம் உள்ளவர்களுக்கு ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். பிரிவு 234 ஏ ன் கீழ், அபராதத்திற்கும் வட்டிக்கும் விதிக்கப்பட்டால், தாமதம் காரணமாக வரிக்கு மேலாக ஒரு சதவீதம் வட்டி மாதத்திற்கு விதிக்கப்படும்.

Harmful Effects of Drinking Coca Cola
Information

Harmful Effects of Drinking Coca Cola