பெண்கள் நகை அணிவதில் அதிகம் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார்கள். அதிலும் எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும், நகை அணிவதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். பெண்கள் அணியக்கூடிய அணிகலன்களுக்கு ஆன்மீக வழியாக பல பலன்கள் கூறப்படுகிறது.
இருப்பினும் நகை அணிவதன் மூலம் உடல் சார்ந்த பிரச்சனைகளை சரிப்படுத்த உதவுகிறது என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா? நகை என்பது அழகுக்காக மட்டும் அணியப்படுவதில்லை உடல் சார்ந்த பிரச்சனைகள் வராமல் தடுக்கவும் பயன்படுகிறது. தற்போது அதன் பயன்கள் பற்றி பார்க்கலாம.
கொலுசு: கல்லீரல், பித்தப்பை, சிறுநீரகம், சிறுநீர் பை, கர்ப்பப்பை பிரச்சனைகளை சரி செய்கிறது.
நெற்றிச் சுட்டி: இந்த ஆபரணம், உடம்பில் உள்ள வெப்பத்தை கட்டுப்படுத்த பயன்படுகிறதாம். மேலும் இதை அணியும் போது தலைவலி, 'சைனஸ்' பிரச்னைகளை சரி செய்கிறதாம்.
தோடு: காதில் அணியும் ஆபரணம். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் அணிகிறார்கள். இதன் அணிவதின் முக்கிய நோக்கம், கண் பார்வையை வலுப்படுத்த தான் என்று ஆய்வில் சொல்லப்படுகிறது.
இந்த ஆபரணம், உடம்பில் உள்ள வெப்பத்தை கட்டுப்படுத்த பயன்படுகிறதாம். மேலும் இதை அணியும் போது தலைவலி, 'சைனஸ்' பிரச்னைகளை சரி செய்கிறதாம்.