How To Use Credit Card In A Smart Way - கிரெடிட் கார்டுகளை எவ்வாறு ஸ்மார்ட்டாக பயன்படுத்துவது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
How To Use Credit Card In A Smart Way - கிரெடிட் கார்டுகள் எனப்படும் கடன் அட்டை மூலம் ஒருவர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வட்டி ஏதும் இல்லாமல் கிரெடிட் கார்டு லிமிட்டுகளுக்குள் எதையும் பர்சேஸ் செய்து கொள்ள முடியும், அதை திருப்பி செலுத்துவதற்கு ஏற்ப 18-45 நாட்கள், 21-55 நாட்கள் என ஒவ்வொரு வங்கி கிரெடிட் கார்டுகளும் ஒவ்வொரு விதமான வட்டி இல்லா ரீபேமெண்ட் காலங்களை கொடுக்கின்றன. இந்த காலங்களுக்குள் செலுத்தப்படும் எந்த பேமெண்ட்களுக்கும் வட்டி போடப்படுவதில்லை, காலம் தவறும் போது வட்டி மட்டும் அல்லாது பிராசசிங் பீஸ்களும் வசூலிக்கப்படுகின்றன.
கிரெடிட் கார்டுகள் வரமா அல்லது சாபமா என்று பொதுவாக கேட்டால் அது ஒவ்வொருவரும் பயன்படுத்தும் விதத்தில் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். கிரெடிட் கார்டுகளின் உண்மையான பயன் பற்றியும் அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்றும் நீங்கள் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டுமானால் ஒரு 17 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு உண்மை சம்பவத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
அது 2007 சமயம், ஒருவருக்கு ஏதாவது பழைய பைக் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்து இருக்கிறது, ஒரு மெக்கானிக் ஒருவரிடம் சொல்லி வைத்து இருந்திருக்கிறார், அவருக்கு அதிர்ஷ்டமும் துரதிர்ஷ்டமும் சேர்ந்து வந்தது போல, சொல்லி வைத்த ஒரிரு நாளிலேயே ஒரு நல்ல கண்டிசனில் பைக் உடனடியாக கிடைத்து இருக்கிறது, விலை 14,000 ரூபாய், ஆனால் அது மாத கடைசி, கையில் காசு சுத்தமாக இல்லை, உடனடியாக பணம் கொடுக்காவிட்டால் பைக் வேறு ஒருவருக்கு போய் விடும்.
நண்பர்களிடம் உறவினர்களிடம் ஒரு 5 நாட்களில் பணம் திரும்ப தருவதாக கூறி கடன் கேட்டு இருக்கிறார், யாரும் தர முன் வரவில்லை, என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தவருக்கு ஒரு வாரங்களுக்கு முன்பு தான் தனக்கு வந்த கிரெடிட் கார்டு குறித்த சிந்தனை எழுந்து இருக்கிறது, அதில் இருந்து பணம் எடுக்க முடியுமா என வங்கியில் சென்று கேட்டு இருக்கிறார், வங்கி ஊழியர்களும் ஆம் என்று சொல்லவே இவருக்கு கட்டற்ற மகிழ்ச்சி, ஆனால் ஐந்தாயிரம் ஐந்தாயிரம் ஆக தான் எடுக்க முடியும்,
ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் ரூ 500 பிராசசிங் பீஸ் ஆக பிடிக்கப்படும் என்று வங்கி ஊழியர்கள் கூறினர், அப்படி என்றால் 14,000 எடுப்பதற்கு மூன்று முறை பணம் எடுக்க வேண்டும், அவ்வாறான பட்சத்தில் பிராசசிங் பீஸ் மட்டும் ரூ 1500 போய்விடும், இது போக கடுமையான வட்டி வேறு விதிக்கப்படும், இதை கேட்டதும் உடைந்த அவர் இருந்த ஒரு வாய்ப்பும் போய் விட்டதே என்று யோசித்துக் கொண்டே ஒரு டீ குடிக்க வெளியில் வந்து இருக்கிறார், எதிரில் தங்க கடை. அவருக்கு ஒரு யோசனை வந்தது.
தங்க கடைக்குள் சென்ற அவர் கிரெடிட் கார்டு மூலம் 14,000 மதிப்புள்ள ஒரு தங்க நாணயத்தை பில்லோடு வாங்குகிறார், செய் கூலி சேதாரம் ஏதும் இல்லை, வட்டி, பில்லிங்கிற்கு மட்டும் எக்ஸ்ட்ராவாக ஒரு ரூ 350 ஆகிறது, வாங்கி விட்டு வெளியில் சென்று ஒரு ஜூஸ் அருந்தி விட்டு மீண்டும் அதே தங்க கடைக்குள் செல்கிறார், அந்த தங்க நாணயத்தை அங்கு விற்கிறார், பில்லோடு விற்கும் பட்சத்தில் அதே 14,000 ரூபாய் அவருக்கு திரும்ப கிடைக்கிறது. இந்த வகையில் அவருக்கும் ரூ 350 மட்டுமே பிடித்தமானது.
அந்த 14,000 ரூபாயை எடுத்துக் கொண்டு மெக்கானிக் ஷாப் செல்கிறார், பைக்கை வாங்குகிறார், வீட்டிற்கு பைக்கோடு செல்கிறார், அடுத்த மாதம் வந்ததும் சம்பளம் ஏறியதும் அந்த கிரெடிட் கார்டு கடனை அடைத்து விடுகிறார், இது தான் ஒருவர் கிரெடிட் கார்டுகளை எப்படி ஸ்மார்ட்டாக பயன்படுத்துகிறார் என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணம். அந்த காலத்திலேயே அவ்வளவு ஸ்மார்ட்டாக ஒருவர் கிரெடிட் கார்டை பயன்படுத்தி இருக்கிறார் என்றால், தற்போதைய காலத்தில் இன்னும் அட்வான்ஸ் ஸ்மார்ட்டாகவே பயன்படுத்தலாம்.