• India
```

சொந்த கார் சும்மாவே இருக்கா..அப்படின்னா Ola,Uberlல இணைச்சிடுங்க..!

How To Register Your Car In Ola And Uber

By Ramesh

Published on:  2024-10-24 17:43:26  |    1517

How To Register Your Car In Ola And Uber - உங்களது கார்களை Ola/Uber யில் இணைக்க நினைக்கிறீர்களா, எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம்.

How To Register Your Car In Ola And Uber - ஒரு சிலரது வீட்டில் கார் ஆசைக்கு வாங்கி விட்டு அது வருசக்கணக்கில் சும்மாவே இருக்கும், இன்னும் சிலர் கார் ஓட்டி, சம்பாதிப்பதற்காக வாங்கி விட்டு டிராவல்ஸ் என விசிட்டிங் கார்டெல்லாம் அடித்து வைத்து விட்டு தினமும் ஒரு நடையோ, இரண்டு நடையோ மட்டும் அடித்துக் கொண்டு இருப்பார்கள், அத்தகைய சிலர் அவர்களது வாகனத்தை Ola மற்றும் Uber யில் இணைத்து எப்படி இலாபம் பார்ப்பது என்பதை விவரிக்கும் தொகுப்பு தான் இது, முழுமையாக படித்திடுங்கள்.

தேவையான ஆவணங்கள்

காருக்கு: கார் ரிஜிஸ்ட்ரேசன் ஆவணம், நடப்பில் இருக்கும் புதுப்பிக்கப்பட்ட இன்சூரன்ஸ், வாகன அனுமதி சான்றிதழ், புகை வெளியிடும் அளவிற்கான சான்றிதழ் (Pollution Certificate)

டிரைவருக்கு: கமெர்சியல் டிரைவிங் லைசென்ஸ், ஆதார் கார்டு, பான் கார்டு, போட்டோ, இருப்பிட சான்றிதழ், போலீஸ் வெர்பிகேசன் சான்றிதழ், கேன்சல்டு செக் அல்லது வங்கி பாஸ்புக்


எப்படி பதிவு செய்வது?

1) நீங்கள் ஆன்லைனில் பதிவு செய்ய விரும்புகிறீர்கள் என்றால்

Ola: https://drive.olacabs.com

Uber: https://www.uber.com/in/en/drive/

2) நீங்கள் ஆன்லைனில் பதிவு செய்கிறீர்கள் என்றால் மேற்கண்ட ஆவணங்கள் அனைத்தும், பதிவு செய்வதற்கு முன்னதாக, Document ஆக, 200 Kb க்குள் உங்கள் மொபைலிலோ, லேப்டாப்பிலோ இருக்க வேண்டும்,

3) ஆப்லைனில் என்றால் நேரடியாக Ola, Uber அலுவலகத்திற்கு சென்று ஆவணங்களை சமர்ப்பித்தால் அனைத்து ரிஜிஸ்ட்ரேசன் வேலைகளையும் அவர்களே செய்து கொடுப்பார்கள்,

4) இதற்கு தனியாக கட்டணங்கள் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை.


சரி, இதனால் நமக்கு என்ன இலாபம்?

1) கார் சும்மா இருப்பதற்கு பதில் ஆபர்களை அடிக்கலாம், நிறைய நடைகள் வந்து கொண்டே இருக்கும்,

2) ஒரு நடைக்கான Ola, Uber கமிசன் என்பது 10 சதவிகிதம் மட்டுமே,

3) 7am to 12:30pm மற்றும் 5pm to 11pm பீக் ஹவர்களாக அறியப்படும், அந்த நேரங்களில் நீங்கள் அடிக்கும் நடைகளுக்கு வருமானம் அதிகமாக கிடைக்கும்,

4) ஒரே நாளில் 12 நடைகள் நீங்கள் அடித்தால், உங்களுக்கு Ola மற்றும் Uber மூலம் ஒரு குறிப்பிடத்தக்க போனஸ் கிடைக்கும், அது ரூ 1500 முதல் 4000 வரை இருக்கலாம்,

5) ஏர்போர்ட் டிராப்க்கு தனி போனஸ் கிடைக்கும், 

6) பீக் ஹவர் நடைகளுக்கு ரூ 200 முதல் 300 வரை கிடைக்கும் (தூரத்தை பொறுத்தது).

Harmful Effects of Drinking Coca Cola
Information

Harmful Effects of Drinking Coca Cola