• India
```

பணத்தை தவறான UPI Address க்கு அனுப்பி விட்டீர்களா...இதோ திரும்ப பெறுவதற்கான வழிகள்...!

How To Recover Money Sent To The Wrong UPI Address

By Ramesh

Published on:  2024-11-23 22:14:00  |    507

How To Recover Money Sent To The Wrong UPI Address - கவனக்குறைவால் பணத்தை தவறான UPI Address க்கு அனுப்பி விட்டீர்களா, இதோ திரும்ப பெறுவதற்கான ஒரு சில வழிகளைப் பார்க்கலாம்.

How To Recover Money Sent To The Wrong UPI Address - முன்னாடி எல்லாம் ஒரு பணப்பரிமாற்றம் நடக்க வேண்டுமெனில் கிட்டதட்ட பார்ம் எழுதி, பணத்தை கொடுத்து வங்கிகள் அதை சரி பார்த்து, அதை வரவு வைத்து அதற்கு அப்புறம் தான் பணமானது நாம் யாருக்கு அனுப்புகிறோமோ அவர்களை போய் சேரும், எப்படியும் இதற்கிடையில் ஒரு அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் ஆவது ஆகி விடும்.

இது போக வங்கிகளுக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் இருக்கும், எப்படி பார்த்தாலும் ஒரு பரிமாற்றத்திற்கு காத்திருப்பு நேரம், செல்லும் நேரம், அவர்கள் வரவு வைக்கும் நேரம் என எல்லாம் சேர்த்து ஒரு மூன்று மணி நேரம் ஆகி விடும், ஆனால் தற்போதெல்லாம் UPI மூலம் ஒருவருக்கு பணம் பரிமாற்ற ஆகும் நேரம் என்பது 5 விநாடிகளுக்கும் குறைவு, முக்கியமாக வங்கிகள் செல்ல தேவையே இல்லை.



சரி பணம் அனுப்பும் போது தவறான UPI Addressக்கு அனுப்பி விட்டால் என்ன செய்வது?

1) முதல் யாருக்கு பணத்தை தவறாக அனுப்பி விட்டீர்களோ, அவர்களை தொடர்பு கொள்ள முடிந்தால் பேசி பாருங்கள், தொடர்பு கொள்ள முடியவில்லை என்றாலோ, அவர்கள் சரி வர பதில் தரவில்லை என்றாலோ அடுத்த கட்டம் உடனடியாக செல்ல வேண்டும்,

2) அடுத்த கட்டமாக நீங்கள் பயன்படுத்தும் UPI செயலியின் வாடிக்கையாளர்கள் சப்போர்ட்டை அணுகிடுங்கள், அவர்கள் கேட்கும் தகவல்களை பதற்றமின்றி அவர்களிடம் தெளிவாக கூறுங்கள், அவர்கள் உங்கள் பணத்தை திரும்ப பெறுவதற்கு வழிவகை செய்து கொடுப்பார்கள்,

3) அடுத்தகட்டமாக நேரடியாக வங்கிக்கு சென்று விட வேண்டும், யார் பொறுப்பாளரோ, மேலாளரோ அவரிடம் நேரடியாக நடந்ததை கூறும் பட்சத்தில் அவர்களும் பணத்தை மீட்க வழி வகை செய்து கொடுப்பார்கள்,

4) பெரும்பாலும் இந்த கட்டத்திலேயே உங்கள் பணம் திரும்ப கிடைத்து விடும், பணம் பெற்றவரும் உங்கள் வங்கியாக இருந்தால் சீக்கிரம் கிடைத்து விடும், வேறு வங்கியாக இருந்தால் நேரம் ஆகலாம்,

5) UPI பரிமாற்றத்தில் ஏதும் தவறு நிகழ்ந்தால் 1800-120-1740 என்ற நம்பருக்கும் கால் செய்து நிகழ்ந்தனவற்றை கூறலாம், அவர்களும் பணத்தை திரும்ப பெறுவதற்கான வழிவகைகளை செய்து கொடுப்பார்கள்,

6) இவை அனைத்திலும் உங்கள் பணம் திரும்ப கிடைக்கவில்லை எனில் நேரடியாக National Payments Corporation of India (NPCI) அலுவலகத்திற்கு நேரடியாக சென்று புகார் கொடுக்கலாம்.

Harmful Effects of Drinking Coca Cola
Information

Harmful Effects of Drinking Coca Cola