Paying Credit Card Bills With Another Credit Card - பொதுவாக இரண்டு வங்கிகளின் கிரெடிட் கார்டுகள் கைகளில் இருக்கும் போது, ஒரு கிரெடிட் கார்டுக்கான பில்லை இன்னொரு கிரெடிட் கார்டு மூலம் கட்ட முடியுமா என்ற கேள்வி நமக்குள் எழும், அந்த கேள்விக்கு விடை தான் இந்த தொகுப்பு.
Paying Credit Card Bills With Another Credit Card - நேரடியாக கிரெடிட் கார்டுகள் மூலம் இன்னொரு கிரெடிட் கார்டு பில்லை கட்ட முடியுமா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும், ஆனால் அதற்கு ஒரு சில வழிகள் இருக்கிறது, அந்த வழிகள் என்ன, அந்த வழிகளுள் எந்த வழி சிறந்த வழி என்பது குறித்தும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
1) பணம் எடுத்து கட்டுதல்
பொதுவாக ஒவ்வொரு கிரெடிட் கார்டிலும் ATM யில் பணம் எடுக்கும் ஒரு வசதி இருக்கும், அது உங்களது கிரெடிட் கார்டு லிமிட்டில் 20 சதவிகிதம் முதல் 40 சதவிகிதம் இருக்கலாம், உதாரணத்திற்கு உங்களது கிரெடிட் கார்டு லிமிட் 1,00,000 எனில் உங்களால் ATM யில் 20,000 முதல் 40,000 வரை பணம் எடுத்துக் கொள்ள முடியும், அதற்கான மாத வட்டி விகிதம் 2.5% முதல் 3.5% சதவிகிதம் வரை இருக்கலாம், அவ்வாறாக ஒரு கிரெடிட் கார்டில் இருந்து பணம் எடுத்து அக்கவுண்ட்டில் போட்டு இன்னொரு கிரெடிட் கார்டுக்கு பில் கட்டலாம்.
2) E-Wallet
பொதுவாக தற்போதெல்லாம் பல இணையதள ஈ காமெர்ஸ் மற்றும் பேமெண்ட் போர்டல்கள், E-Wallet என்று தனியாக ஒரு ஆப்சனை வைத்து இருக்கின்றன, அந்த E-Wallet யில் கொஞ்சம் பணத்தை Add பண்ணி விட்டு அதன் மூலம் பண்ணும் பேமெண்ட்களுக்கு அட்டகாசமான கேஸ்பேக்குகளும் வழங்குகின்றன, அவ்வாறாக ஒரு கிரெடிட் கார்டு மூலம் E-Wallet யில் பணத்தை Add செய்து விட்டு, அதை இன்னொரு கிரெடிட் கார்டின் பில் பேமெண்ட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
" ஏதாவது எமர்ஜென்ஸி என்னும் போது மட்டும் இப்படியான கிரெடிட் கார்டு ஹேக்குகளை பயன்படுத்துங்கள், இல்லையெனில் உங்களது கிரெடிட் ஸ்கோர் வெகுவாக பாதிப்படையாலம், பணம் எடுக்கும் வசதியை பயன்படுத்தும் போது உடனடியாக அதை கட்ட முயற்சித்து விடுங்கள், இல்லையேல் அசலை விட அதிகம் ஆகி விடும், அந்த வகையில் E Wallet முறை ஒரு கிரெடிட் கார்டு பில்லை கட்டுவதற்கு ஒரு சிறந்த தீர்வாக பார்க்க முடிகிறது "