How To Open Seller Account In Meesho - உங்கள் பொருளை Meesho தளத்தில் விற்பனை செய்ய ஆசைப்படுகிறீர்களா, எப்படி ரிஜிஸ்டர் செய்வது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
How To Open Seller Account In Meesho - பொதுவாகவே நீங்கள் தயாரித்த ஒரு பொருள் எவ்வளவு தரமானதாக இருந்தாலும் கூட உள்ளூரில் அதற்கு ஏற்ப விலை கிடைக்காது, நல்ல இலாபமும் வைத்து விற்க முடியாது, மேலும் விற்பனை என்பது ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே முடங்கி விடுவதால் பெரிய வருமானமும், பெரிய இலாபமும் எதிர்பார்க்க முடியாது, ட்ரான்ஸ்போர்ட்கள் மூலம் சந்தைப்படுத்தினால் அசலே கிடைப்பது கடினமாகி விடும்.
அந்த வகையில் இதற்கு என்ன தான் தீர்வு என்றால் ஈ-காமர்ஸ் தான் தீர்வு, ஈ-காமர்ஸ் மூலம் உங்கள் பொருளை தேசம் முழுக்கவும் எடுத்து செல்ல முடியும், அதே சமயத்தில் நினைத்த விலை கிடைக்கும், நினைக்கின்ற இலாபமும் கிடைக்கும், விற்பனை சந்தை விரிவாகும், சரி அந்த வகையில் பிரபல Meesho தளத்தில் உங்களது பொருளை எப்படி பதிவு செய்து சந்தைப்படுத்துவது என்பது பார்க்கலாம்.
எப்படி பிராடக்டுகளை Meesho வில் ஏற்றி விற்பனை செய்வது...?
1) முதல்கட்டமாக உங்கள் நிறுவனத்திற்கு என்று ஒரு மொபைல் எண்ணும் ஈமெயிலும் கிரியேட் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
2) பான் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஆதார் கார்டை மொபைலில் ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளுங்கள், இது போக நீங்கள் விற்கப்போகும் பொருளை ஒரு நல்ல ஸ்டூடியோவிற்கு சென்று நன்கு கவரும் வகையில் போட்டோ எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்,
3) https://supplier.meesho.com பின்னர் இந்த தளத்திற்குள் சென்று, 'Start Selling' என்ற ஆப்சனை க்ளிக் செய்யவும்,
4) மொபைல் எண், ஈமெயில் உள்ளிட்டவைகளை உள்ளிட்டு, மொபைல் எண்ணிற்கு வரும் OTP யை கொடுத்து, பாஸ்வேர்டு கிரியேட் செய்து விட்டால் அக்கவுண்ட் கிரியேட் ஆகி விடும்,
5) பின்னர் பொருளின் புகைப்படம், பான் கார்டு, வங்கி கணக்கு விவரங்கள் உள்ளிட்டவைகளை எல்லாம் கொடுத்து பதிவிட்டு விட்டால் Meesho வில் உங்கள் பொருள் விற்பனைக்கு வந்து விடும்.
" E- Commerce என்பது மூலைக்கு மூலை வந்து விட்டதால், உங்கள் பொருளை தேசம் எங்கும் சந்தைப்படுத்துவது தற்போதெல்லாம் எளிதாகி விட்டது "