How To Open Flipkart Seller Account Tamil - உங்களது உற்பத்தி பொருளை, விற்பனை பொருளை ஆன்லைனில் சந்தைப்படுத்த சிரமப் படுகிறீர்களா, இனி இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் ப்ளார்ட்பார்ம் ஆன ப்ளிப்கார்ட்டிலேயே விற்கலாம், எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
How To Open Flipkart Seller Account Tamil - பொதுவாகவே உற்பத்தியாளர்களுக்கோ அல்லது விற்பனையாளர்களுக்கோ ஆகப்பெரும் சிரமமாக இருப்பது அவர்களின் பொருளை சந்தைப்படுத்துவது தான், தற்போது பலரும் அவரது பொருள்களை ஆன்லைனிலும், வாட்சப்பிலும், இன்ஸ்டாவிலும் என விளம்பரங்கள் மூலம் சந்தைப்படுத்தினாலும் கூட, அது ஒரு சிலருக்கு கை கொடுத்தாலும், பெரும்பாலானோருக்கு அவர்கள் நினைக்கும் விற்பனை என்பது எட்டா கனியாகவே இருக்கிறது.
இந்த நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் விற்பனை ப்ளாட்பார்ம் ஆன ப்ளிப்கார்ட், உங்களுக்காகவே இலவசமாக ஒரு செல்லர் அக்கவுண்ட்டை தருகிறது. இதன் மூலம் உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும் உங்களது பொருள்களை ப்ளிப்கார்ட் எனப்படும் மிகப்பெரிய ஆன்லைன் ப்ளாட்பார்மில் விற்க வாய்ப்பு கிட்டும், இதன் மூலம் உங்களது விற்பனை அல்லது உற்பத்தி பொருள்களை தேசம் முழுக்க சந்தைப் படுத்தலாம்.
சரி, ப்ளிப்கார்ட் செல்லர் அக்கவுண்ட் எப்படி ஓபன் செய்வது?
1) முதலில் உங்களிடம் ஆதார், எப்போதும் பயன்படுத்துகிற ஒரு ஆக்டிவான மொபைல் நம்பர், எப்போதும் பயன்படுத்துகிற ஒரு ஈமெயில் ஐடி இருப்பதை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.
2) நீங்கள் விற்பனை செய்ய இருப்பது புத்தகம் மட்டும் என்றால் ஜிஎஸ்டி எண் தேவை இல்லை, ஆனால் பான் கார்டு தேவைப்படும்.
3) நீங்கள் புத்தகம் தவிர்த்து ஏனைய பொருள்களையும் விற்பனை செய்ய ஆசைப்பட்டால் நிச்சயம் ஜிஎஸ்டி எண் தேவை.
4) குறைந்த பட்சம் ஒரு விற்பனை பொருளாவது உங்களிடம் இருக்க வேண்டும்.
4) இது அனைத்தும் உங்கள் கைகளில் இருக்கும் பட்சத்தில் நேரடியாக https://seller.flipkart.com வலைதளத்திற்குள் சென்று, கேட்கும் தகவல்களை மட்டும் உள்ளிட்டு 10 நிமிடத்தில் உங்களது விற்பனை பொருளை ப்ளிப்கார்ட்டில் ஏத்தி விடலாம்.
சரி, கமிசன் ஏதும் உண்டா...?
ஆம் நிச்சயம் உண்டு, ஷிப்பிங், கமிஷன், ஒரு குறிப்பிடத்தக்க குறித்த தொகை என எல்லாம் சேர்த்து ஒரு 20 சதவிகித கமிஷன், ஒரு பொருளுக்கு ப்ளிப்கார்ட் விதிக்கிறது, இந்த கமிஷன் என்பது பொருளுக்கு ஏற்ப, எடைக்கு ஏற்ப, நீங்கள் அனுப்பும் இடத்திற்கு ஏற்ப மாறுபடலாம், உங்களது பொருளை நேரடியாக உங்களிடம் வந்து வாங்கிவிட்டு, பேக்கிங், ஷிப்பிங் என எல்லா வசதிகளையும் ப்ளிப்கார்ட் செய்து கொடுக்கிறது. நீங்களாவும் பேக்கிங் செய்து ஷிப்பிங் செய்து கொள்ளலாம், அது உங்களுடைய விருப்பமாகிறது.
" உங்களது பொருள் தரமாக இருக்கும் பட்சத்தில், அது நிச்சயம் தேசம் எங்கும் சென்றடையும், தைரியமாக களம் இறங்குங்கள், வெறும் 60 ரூபாயில் ப்ளிப்கார்ட்டில் விற்பனையை துவங்கியவர்கள் எல்லாம் இன்று இலட்சாதிபதியாக இருப்பது வரலாறு "