• India
```

கிரெடிட் கார்டு மூலம் சிபில் ஸ்கோரை உயர்த்துங்கள்...இதோ ஐடியா...!

How To Increase CIBIL Score In Tamil

By Ramesh

Published on:  2024-10-12 08:38:56  |    546

How To Increase CIBIL Score By Using Credit Card - கிரெடிட் கார்டுகள் எனப்படும் கடன் அட்டை மூலம், உங்களது கடனை மட்டும் அல்ல, உங்களது சிபில் ஸ்கோரையும் நன்றாகவே உயர்த்த முடியும், அது எவ்வாறு என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

How To Increase CIBIL Score By Using Credit Card - பொதுவாகவே கடன் அட்டை எனப்படும் கிரெடிட் கார்டுகள் சாபங்களாகவே பார்க்கப் படுகின்றன, ஆனால் அதை உபயோகிக்கும் விதத்தில் உபயோகிக்கும் போது அது நிச்சயம் வரம் தான், அத்தியாவசியங்களுக்காக மட்டும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்திக் கொண்டு அதில் அதீத பயனடைபவர்களும் இருக்க தான் செய்கிறார்கள், எதற்கெடுத்தாலும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்திக் கொண்டு அதில் இருந்து மீள முடியாதவர்களும் இருக்கதான் செய்கிறார்கள்.

ஆக மொத்தத்தில் சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், கிரெடிட் கார்டு என்பது ஒரு இக்கட்டான சூழலில் குட்டி குட்டி கடன் தரும் ஒரு நல்ல நண்பன், அதுவே அவனிடம் தினம் தினம் நீங்கள் கடன் கேட்டுக் கொண்டே இருந்தால் நண்பன், எந்த ஒரு சமயத்திலும் அந்த நண்பன் உங்களுக்கு ஆகச்சிறந்த எதிரி ஆகவும் வாய்ப்புகள் இருக்கிறது. ஆதலால் கிரெடிட் கார்டுகளை நண்பனாக மட்டும் பயன்படுத்துங்கள், உங்கள் எதிரியாக என்றும் மாற்றி விடாதீர்கள்.


சரி, இந்த கிரெடிட் கார்டு எப்படி சிபில் ஸ்கோரை உயர்த்தும்?

பொதுவாக ஒருவரின் சிபில் ஸ்கோரை உயர்த்துவதற்கு ஆகச்சிறந்த வழி என்பது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் கீழ் கடனை வாங்கி அதை குறித்த நேரத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும், அது கோல்டு லோன் ஆகவோ, பெர்சனல் லோனாகவோ இருக்கலாம், ஆனால் எந்த ஒரு நிறுவனமும் உங்களுக்கு மாதம் மாதம் கடனை தராது, ஒரு கோல்டு லோனோ அல்லது பெர்சனல் லோனோ அதை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம் என்பது மிக மிக அதிகம்.

சரி, அப்படி என்றால் சட்டென்று சிபில் ஸ்கோரை உயர்த்த என்ன வழி இருக்கிறது என்றால், நிச்சயம் கிரெடிட் கார்டுகள் தான், அது தான் உங்களுக்கு மாதம் மாதம் குட்டி குட்டி கடனைத் தரும், கடன் என்னும் போது ஒரு எண்பதாயிரத்திற்கு பிளைட் டிக்கெட் எடுப்பதோ, ஒரு ஒரு இலட்சத்திற்கு கிரெடிட் கார்டில் டிவி எடுப்பதோ இல்லை, அவ்வாறாக நீங்கள் செலவு செய்யும் பட்சத்தில் கிரெடி கார்டு கடனையும் செலுத்த முடியாமல் உங்கள் சிபில் இன்னும் கீழ் தான் செல்லும்.


ஒரு குட்டி குட்டி பில்கள், மாத மின்சார பில்கள், மாதாந்திர போன் பில்கள், ரீசார்ஜ்கள், டிவிக்கான மாதாந்திர ரீசார்ஜ்கள் என இப்படிப்பட்ட குட்டி குட்டி மாதாந்திர பேமெண்ட்களை மட்டும் செலுத்த கிரெடிட் கார்டுகளை பயன்படுத்திக் கொண்டு, அதை உரிய நேரத்தில் திருப்பியும் செலுத்தும் பட்சத்தில் சிபில் ஸ்கோரின் மதிப்பு நன்றாகவே உயரும், உரிய நேரத்தில் செலுத்துவதற்கு ஏற்ப  ஒரு ரீமைண்டர் வைத்துக் கொள்வது நல்லது, இல்லையேல் ஆட்டோ டெபிட் மூலம் உங்களது கணக்கில் இருந்து நேரடியாக எடுத்துக் கொள்ள வழி வகை செய்யலாம்.

" இவ்வாறாக தொடர்ந்து மாதாந்திர பேமெண்ட்களை கிரெடிட் கார்டுகள் மூலம் செலுத்தி, அதை சரியான நேரங்களின் திருப்பி செலுத்தும் பட்சத்தில், உங்கள் சிபில் ஸ்கோர் ஆட்டோமேட்டிக்காகவே ஒரு சிறந்த நிலைக்கு உயரும் "

Harmful Effects of Drinking Coca Cola
Information

Harmful Effects of Drinking Coca Cola