How To Get VIP Number For Car -ஃபேன்சி நம்பர் பிளேட்டை இப்பொழுது மிகவும் எளிமையாக வாங்கி கொள்ளலாம். அதை எப்படி வாங்குவது என்று இப்பொழுது பார்க்கலாம்.
How To Get VIP Number In Online - பிற வாகனங்களை காட்டிலும் தங்களுடைய வாகனங்களுக்கு தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதற்காக VIP நம்பர் வாங்குபவர்கள் மிகவும் அதிகம்.அவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.ஃபேன்சி நம்பர் பிளேட்டை இப்பொழுது மிகவும் எளிமையாக வாங்கி கொள்ளலாம். அதை எப்படி வாங்குவது என்று இப்பொழுது பார்க்கலாம்.
பதிவு கட்டணம் மற்றும் பிற கட்டணங்கள்:
ஃபேன்சி நம்பர் பிளேட்டுக்கு விண்ணப்பிக்க, நீங்கள் முதலில் ஒரு குறிப்பிட்ட தொகையை பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும்.பிறகு, நீங்கள் தேர்வு செய்யும் நம்பருக்கான அடிப்படை விலையையும் டெபாசிட் செய்ய வேண்டும். அதன் பிறகு, நம்பர் ஒதுக்கப்பட்ட பின்னர், முழு தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த வேண்டும், இல்லையெனில் விண்ணப்பம் ரத்து செய்யப்படும். பதிவு கட்டணங்கள் திருப்பி தரப்படமாட்டாது.
VIP நம்பர் பிளேட்டை எளிமையான முறையில் பெறுவது எப்படி?
1. பதிவு செய்யவும்:
முதலில், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் (MoRTH) இணையதளத்தில் பொதுப் பயனராக பதிவு செய்ய வேண்டும்.
2. உள்நுழைவும்:
பதிவுக்கு பிறகு, உங்கள் கணக்கில் உள்நுழையவும்.
3. RTO தேர்வு மற்றும் நம்பர் தேர்ந்தெடுக்கவும்:
உங்கள் இடத்திற்கு அருகிலுள்ள RTO-வை தேர்வு செய்து, கிடைக்கும் பட்டியலில் இருந்து உங்கள் விருப்பமான ஃபேன்சி நம்பரைத் தேர்ந்தெடுக்கவும். ஒவ்வொரு நம்பருக்கும் முன்பதிவு கட்டணத்தை காணலாம்.
4. கட்டணம் செலுத்தவும்:
தேர்ந்தெடுத்த நம்பரை முன்பதிவு செய்ய, தேவையான பதிவுக் கட்டணத்தைச் செலுத்தவும்
5. ஏலத்தில் பங்கேற்கவும்:
உங்கள் விருப்ப நம்பருக்கான ஏலத்தில் பங்கேற்று, தேவைப்பட்டால் உங்கள் ஏலத்தை அதிகரிக்கவும்.
6. ஏலம் முடிந்தவுடன்:
நம்பர் பிளேட்டைப் பாதுகாக்க தேவையான கட்டணத்தைச் செலுத்தவும்.
7. அலாட்மென்ட் லெட்டர்:
இறுதியாக, அலாட்மென்ட் லெட்டரைப் பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இதுவே உங்கள் ஃபேன்சி அல்லது VIP நம்பர் பிளேட்டுக்கான அதிகாரப்பூர்வ குறிப்பு ஆகும்.
நம்பர் பிளேட் கிடைக்கிறதா என்பதை சரிபார்ப்பது எப்படி?
MoRTH இணையதளத்தில் "Choice Number" பொத்தானைக் கிளிக் செய்து, RTO-வை தேர்வு செய்து, விரும்பிய நம்பரை உள்ளீடு செய்து, அது கிடைக்கிறதா என்பதை சரிபார்க்கலாம்.
இந்த எளிமையான முறைகளை பயன்படுத்தி மிகவும் சுலபமாக பெறலாம்.
How To Get VIP Number For Car | How To Get VIP Number In Online
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2