How To Get Temporary Crackers License - தீபாவளிக்கு பட்டாசு விற்கனும்னு ஆசை இருக்கா, அப்படின்னா முதல்ல பட்டாசு உரிமம் வாங்கனும், எப்படின்னு இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
How To Get Temporary Crackers License - பட்டாசு உரிமம்னா என்ன, எப்படி எடுப்பது, எங்கு பட்டாசுகளை கொள்முதல் செய்வது, பட்டாசு கடையில் எவ்வாறு இலாபம் இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
சரி, முதலில் பட்டாசு உரிமம்னா என்ன?
பட்டாசு உரிமம் என்பது ஒருவர் நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக பட்டாசு விற்பதற்காக வருவாய் துறையின் மூலம் வழங்கப்படும் ஒரு ஆவணம் ஆகும், இதன் மூலம் எந்தவொரு தனிநபரும் பட்டாசு விற்பதற்காக உரிமம் வாங்க முடியும், தீயணைப்பு துறை மற்றும் வருவாய் துறை என இரண்டு துறைகளின் அனுமதி கிடைத்தால் மட்டுமே நீங்கள் பட்டாசு கடை வைக்க முடியும்.
சரி, தற்காலிக பட்டாசு உரிமம் பெறுவது எப்படி?
உங்களது ஊரில் இருக்கும் E-Seva மையத்தில் தான் தற்காலிக பட்டாசு உரிமம் என்பது எடுக்க முடியும், அதற்கு ஒரு சில ஆவணங்கள் தேவைப்படும், அவை என்ன என்ன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
1) ஆதார் கார்டு, உங்களுடைய பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
2) இதற்கு முன்னதாக தற்காலிக பட்டாசு உரிமம் வாங்கி இருந்தால் அதன் நகல்
3) ஏதாவது ஒரு பொதுத்துறை வங்கியில் அரசு கணக்கில் தற்காலிக பட்டாசு உரிமத்திற்காக ரூ 500 (அ) 600 செலுத்தியமைக்கான சான்று, எவ்வளவு கட்ட வேண்டும் என ஈ-சேவை மையம் வைத்து இருப்பவர்களிடம் கேட்டுக் கொள்ளலாம்.
4) கடைக்கான ஆவணம், வாடகை கடை எனில் வாடகை ஒப்பந்தம்.
5) கட்டிட வரைபடம் மற்றும் கட்டிடத்தை சுற்றி இருக்கும் நிலப்பரப்பின் வரைபடம்.
6) இவை அனைத்தும் உங்களிடம் இருக்கும் பட்சத்தில் ஈ-சேவை மையத்தில் 5 நிமிடத்தில் பட்டாசு உரிமத்திற்கு பதிவு செய்து விடலாம்.
பதிவு செய்வதற்கு கடைசி நாள்: 19-10-2024
சரி, அடுத்தகட்ட நிகழ்வு என்ன?
நீங்கள் கடை வைக்க போகும் இடத்தை ஆய்வு செய்ய வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் தீயணைப்பு துறையில் இருந்து அதிகாரிகள் வருவார்கள், அப்போது தீயணைப்பு உபகரணங்கள் அனைத்தும் உங்களது கடைகளில் இருக்க வேண்டும், சுற்றுப்புறம், கடை இருக்கும் இடம், தீயணைப்பு உபகரணங்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து உங்களது உரிமத்திற்கான அனுமதியை தருவார்கள்.
பட்டாசு கடைகளில் இலாபம் எப்படி இருக்கும்?
தீபாவளி திருவிழா என்னும் போது பட்டாசு வாங்காத குடும்பம் என்று தமிழகத்தில் இருக்காது, பட்டாசுகளை மொத்த விலையில் சிவகாசியில் கொள்முதல் செய்யுங்கள், பின்னர் பட்டாசு விற்க நல்ல கடையை மட்டும் தேர்ந்து எடுத்து விட்டால் தீபாவளி முடியும் முன்பாக நீங்கள் இலட்சாதிபதி தான், பட்டாசை பொறுத்தவரை ஒரு பட்டாசுக்கு 500 சதவிகிதம் வரைக்கும் இலாபம் இருக்கும். அதனால் தைரியமாக துவங்குங்கள்.