• India
```

Google Pay மூலம் வீட்டில் இருந்தே Instant Personal Loan...எப்படி பதிவு செய்வது...?

How To Get Personal Loan On Google

By Ramesh

Published on:  2024-11-22 16:28:21  |    558

How To Get Personal Loan On Google - பிரபல UPI செயலியாக அறியப்படும் Google Pay மூலம் Instant Personal Loan எப்படி பெறுவது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

How To Get Personal Loan On Google - பொதுவாக பலருக்குமே ஏதாவது ஒரு சமயத்தில் அவசர தேவைக்கு பணம் தேவைப்படும், வங்கிகளில் லோன் எடுக்கலாம் என்றால் வாரத்திற்கு ஒரு நாள் லீவ் அதுவும் ஞாயிறு என்னும் போது, வங்கிகளில் லோனுக்காக அலைந்து திரிவது கடினமாக இருக்கும், ஏதாவது செயலிகள் மூலம் லோன் பெறலாமா என்றால் ஏமாற்றி விடுவார்களோ, தகவல்களை திருடி விடுவார்களோ என்னும் பயம்.

சரி, அப்படி என்றால் நம்ப தகுந்த செயலிகள் ஏதேனும் இருக்கா என்றால் இருக்கிறது, நீங்கள் தினமும் பயன்படுத்தும் Google Pay மூலமாகவே Instant Personal Loan வீட்டில் இருந்தே பெற முடியும், நீங்கள் ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் வங்கிகள் மூலம் பெறும் பட்சத்தில், உங்கள் வருமானத்தை பொறுத்து Google Pay உங்களுக்கு ரூ 15,000 முதல் 2 இலட்சம் வரை வாங்க முடியும்.



சரி எப்படி பதிவு செய்வது?

1) நீங்கள் Google Pay பயன்படுத்தும் பட்சத்தில், முதற்கட்டமாக உங்களது Salary Account அதில் இணைத்திருக்கப்பட வேண்டும்,

2) நீங்கள் எடுக்க நினைக்கும் தொகைக்கு ஏற்ப உங்களது வருமானம் இருக்க வேண்டும்,

3) ஆதார், பான் கார்டு அனைத்திலும் தகவல்கள் ஒன்று போல இருக்க வேண்டும்,

4) இதெல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் Google Pay செயலிக்குள் சென்று, Manage Money என்ற ஆப்சனை க்ளிக் செய்யவும்,

5) பின்னர் Get Loan என்ற பட்டனை க்ளிக் செய்து, Apply Loan என்ற ஆப்சனை க்ளிக் செய்யவும்,

6) பின்னர் Google Pay கேட்கும் தகவல்களை உள்ளிடவும், 

7) பின்னர் உங்கள் ஆதார், பான் உள்ளிட்ட தகவல்கள் கேட்கும் உள்ளிடவும்,

8) அனைத்தையும் உள்ளிட்டதும் உங்களது லோன் Process ஸ்டார்ட் ஆகி விடும்,

9) அனைத்து தகவல்களும் சரியாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் கேட்டு இருக்கும் லோன் தொகை உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்,

10) வட்டி வீதம் 13.49% முதல் 15% வரை விதிக்கப்படுகிறது.

11) திருப்பி செலுத்த அவகாசம் 1 மாதம் முதல் 36 மாதங்கள் வரை உங்களது தொகையை பொறுத்து கொடுக்கப்படுகிறது.

" Google Pay நம்பத்தகுந்த செயலி என்பதால் நீங்கள் லோன் எடுக்க பயப்பட தேவையில்லை, உங்களது அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கும் பட்சத்தில் வீட்டில் இருந்தே உங்கள் தேவைக்கு Google Pay மூலம் லோனுக்கு பதிவு செய்து கொள்ளலாம் "

Harmful Effects of Drinking Coca Cola
Information

Harmful Effects of Drinking Coca Cola