• India
```

சிபில் ஸ்கோர் கம்மியா இருக்கு...ஆனா அவசரமா கடன் தேவைப்படுதா...அப்படின்னா இந்த தொகுப்ப முழுசா பாருங்க...!

Loan With Low CIBIL

By Ramesh

Published on:  2025-02-18 10:49:57  |    703

How to Secure a Loan with a Low CIBIL Score - ரொம்ப அவசரமா லோன் தேவைப்படுத்து, ஆனால் சிபில் ஸ்கோர் இல்ல அப்படிங்கிறவங்க இந்த தொகுப்ப முழுசா பாருங்க, லோன் கண்டிப்பா கிடைக்கலாம்.

பணத்தேவை என்பது எல்லோருக்கும் ஏதாவது ஒரு சூழலில் இருந்து கொண்டே தான் இருக்கும், சில நேரம் அது ஒரு அவசர தேவையாக கூட இருக்கும், ஆனால் அந்த சமயங்களில் பணத்திற்கு என்ன செய்வது என தெரியாமல் திணறி நிற்கும் போது வங்கி கடன் நியாபகத்திற்கு வரும், வங்கிக்கு செல்வோம் சிபில் ஸ்கோரை காரணம் காட்டி லோன் கிடையாது என்பார்கள்.

சரி, இத்தகைய இக்கட்டான சூழலை எதிர்கொண்டு எப்படி வங்கிகளில் கடனுதவி பெறலாம் என்றால், உங்களோடு சொந்த உறவாக இருக்கும் இரத்த உறவாக இருக்கும் அல்லது துணையாக இருக்கும் ஒருவரை தேர்வு செய்து அவரை உங்களது லோன் அக்கவுண்ட்டோடு இணைத்து கூட்டு விண்ணப்பம் முறையில் கடனுதவி பெற இயலும்.



பெரும்பாலான வங்கிகள் இந்த கூட்டு விண்ணப்பம் முறையை ஏற்றுக் கொண்டு கடனுதவி வழங்குகின்றன, ஆனால் நீங்கள் அதைப்பற்றி விசாரிக்காமல் அவர்கள் உங்களிடம் இம்முறையை சொல்வதில்லை, சரி இது சரியாகாது வேறு என்ன முறை இருக்கிறது என்றால், உங்கள் மகள், மனைவியை உங்கள் ஊரில் இருக்கும் மகளிர் குழுவில் சேர்த்து விட்டு அதன் மூலம் கடன் பெறலாம்.

நீண்ட வருடங்களாக செயல்படும் மகளிர் குழுக்கள் ஒரு மெம்பருக்கு 2 இலட்சம் கடனுதவி வழங்குகின்றன, அந்த வகையில் உங்கள் வீட்டில் இருக்கும் மெம்பர்கள் எத்துனை பேரோ அத்துனை பேரை இணைத்து உங்களுக்கு தேவையான கடனுதவி எவ்வளவோ அதை பெற்றுக் கொள்ளலாம், ஆண்களுக்கும் சுய உதவி குழுக்கள் தற்போது இருக்கின்றன, அதன் மூலம் ஆகவும் கடனுதவி கோரலாம்.

" சிபில் ஸ்கோர் இல்லாமல் கடன் பெறுவதற்கு இதுவே வழிகள், வேறு எந்த இணைய லோன் மாயையிலும் சிக்காமல் இதை பாலோ பண்ணுங்க, கண்டிப்பா கடன் கிடைக்கும் "

Harmful Effects of Drinking Coca Cola
Information

Harmful Effects of Drinking Coca Cola