How To Get Disability Certificate - மாற்றுத் திறனாளிகள் அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெறும் வகையில் அவர்களுக்கு அரசு மாற்றுத்திறனாளி சான்றிதழும், மாற்றுத்திறனாளி அடையாள அட்டையும் வழங்குகிறது அதை எப்படி பெறுவது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
How To Get Disability Certificate - என்ன தான் ஒருவர் பிறவியிலேயே மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் கூட அவர் அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை பெறுவதற்கு, மாற்றுத்திறனாளி சான்றிதழும், அடையாள அட்டையும் அவசியம், அந்த வகையில் ஒருவர் மாற்றுத்திறனாளி சான்றிதழ் பெறுவதற்கு என்ன என்ன படிநிலைகள் என்பது குறித்து பார்க்கலாம்.
சரி, முதலில் என்ன என்ன ஆவணங்கள் தேவை? எப்படி பதிவு செய்வது?
தேவையான ஆவணங்கள்: முதலாவதாக ஏதாவது ஒரு அரசு மருத்துவரிடம் சென்று, உங்களுக்கான குறைபாடுகளை உறுதி செய்து ஒரு சான்றிதழ் வாங்கி கொள்ள வேண்டும், ஆதார் கார்டு நகலும், ஒரிஜினலும் கையில் வைத்து இருக்க வேண்டும், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஒரு 8 கையில் வைத்துக் கொள்ள வேண்டும், குடும்ப அட்டை மற்றும் சாதிச்சான்றிதழ் நகலும், ஒரிஜினலும் கையில் வைத்திருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளி சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை பெறுவதற்கான தகுதிகள்
1) குறைந்த பட்சம் 40 சதவிகிதத்திற்கு மேல் குறைபாடுகள் இருப்பவர்களே மாற்றுத்திறனாளிகளாக கருத்தில் கொள்ளப்படுகிறார்கள்,
2) பார்வையற்றவர்கள், கை, கால் பாதிக்கப்பட்டவர்கள், செவித்திறன் குறைபாடுடையவர்கள்,மனவளர்ச்சி குன்றியவர்கள் ஆட்டிசம், மூளை முடக்குவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்டோர் உள்ளிட்ட வகைகளுள் ஒன்றாக இருப்பவர்களுக்கு மாற்றுத் திறனாளி சான்றிதழ் வழங்கப்படுகிறது.
பதிவு செய்யும் படி நிலைகள்
1) இந்த ஆவணங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு உங்களது மாவட்டத்தில் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்திற்கு செல்ல வேண்டும்,
2) பெரும்பாலும் இந்த வாரியங்கள் கலெக்டர் ஆபிஸ்சிலேயே அமைக்கப்படுகின்றன,
3) சில மாவட்டங்களில் தனியாக ஆபிஸ் வைத்து செயல்படுகிறது,
4) உங்கள் கையில் ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் உடனடியாக வழங்கப்படும், தேசிய அடையாள அட்டைக்கும் அவர்களே பதிவு செய்து கொடுக்கிறார்கள்,
5) அடையாள அட்டை வருவதற்கு 7 முதல் 28 நாட்கள் வரை ஆகலாம்.