How To Get A Visa To Sri Lanka - இந்தியாவில் இருந்து சுற்றுலா செல்ல வேண்டும், அதுவும் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும், அதுவும் குறைந்த விலையில் விமானத்தில் செல்ல வேண்டும், விசா எளிதாக கிடைக்க வேண்டும், அதே சமயத்தில் சுற்றிப்பார்க்கவும் நிறைய இடங்கள் இருக்க வேண்டும், ரொம்ப காஸ்ட்லியாகவும் இருக்க கூடாது என்றால் நிச்சயம் ஒருவர் இலங்கையை தேர்வு செய்யலாம்.
அந்த வகையில் இலங்கைக்கு சுற்றுலா செல்ல முடிவு பண்ணியாச்சு, அப்புறம் விசா எப்படி எடுப்பது, என்ற குழப்பம் வரும், அந்த குழப்பம் ஏதுமே தேவை இல்லை, ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம், பெரிதாக தகவல்களோ, ஆவணங்களோ கேட்பதில்லை பாஸ்போர்ட் விவரங்கள் மட்டும் கொடுத்து விசாவிற்கான பணத்தை ஆன்லைனில் கட்டி விட்டால் விசா ரெடி ஆகி விடும்.
சரி, விசா எப்படி எடுப்பது?
1) இலங்கை விசா என்பதை Electronic Travel Authorization (ETA) என்ற பெயரில் வழங்கி வருகிறது,
2) அந்த வகையில் முதலில் https://www.eta.gov.lk/slvisa/visainfo/center.jsp இந்த தளத்திற்குள் சென்று Apply என்ற ஆப்சனை க்ளிக் செய்யவும்,
3) பின்னர் சில கண்டிசன்கள் கொடுக்கப்பட்டு இருக்கும், படித்து விட்டு I Agree என்ற ஆப்சனை டிக் செய்யவும்,
4) பின்னர் Tourist ETA என்ற ஆப்சனுக்கு கீழ் Apply for an Individual என்ற ஆப்சனை க்ளிக் செய்யவும்,
5) பின்னர் உங்கள் பாஸ்போர்ட்டை கையில் எடுத்துக் கொண்டு பெயர், பாஸ்போர்ட் தகவல்கள், நீங்கள் செல்லும் முகவரி, ஈமெயில் ஐடி, மொபைல் நம்பர் உள்ளிட்ட தகவல்களை நிரப்பவும்,
6) சரியாக செல்லும் தேதி குறிப்பிட வேண்டி இருக்கும், அதனால் விமான டிக்கெட்டை பதிவு செய்து விட்டு விசாவிற்கு பதிவு செய்யுங்கள்,
7) அனைத்து தகவல்களையும் நிரப்பி விட்டு Next என்ற ஆப்சனை க்ளிக் செய்யவும்,
8) பின்னர் முக்கிய தகவல்கள் சரி பார்க்கும் பொருட்டு காண்பிக்கப்படும்,
9) பின்னர் Payment ஆப்சனுக்கு சென்று ஆன்லைனில் பணத்தை செலுத்தி விட்டால் அடுத்த நிமிடத்தில் உங்கள் மெயிலுக்கு விசா வந்து விடும்.
10) விசா அப்ளிகேசனில் முக்கியமாக மெயில் ஐடியை சரியாக உள்ளிட வேண்டும், காரணம் மெயிலுக்கு மட்டுமே விசா அனுப்பி வைக்கப்படும், இன்னொரு முக்கியமான விடயம் என்னவென்றால் நீங்கள் தவறான மெயில் ஐடியை கொடுத்து விட்டால் விசாவை மீட்பது கடினம்,
11) ஒரு முறை தவறாக அப்ளை செய்து விட்டால், மறுபடியும் விசா பதிவு செய்ய 30 நாள் காத்திருக்க வேண்டும், ஆதலால் தகவல்களை கவனமாக உள்ளிட வேண்டும்.