How To Download Patta In Online - என்ன தான் ஒரு நிலத்திற்குரிய சொத்து பத்திரம் உங்கள் கைகளில் இருந்தாலும் கூட, அந்த நிலத்திற்கான பட்டா என்பது மிக மிக அவசியம், ஒரு சிலர் பட்டா எடுத்து இருப்பார்கள், ஆனால் நீண்ட நாள் ஆனதால் எங்கையோ வைத்து தொலைத்து இருப்பார்கள், இல்லையேல் வைத்த இடம் மறந்து இருக்கும், சொத்திற்கான பத்திர ஆவணம் மட்டும் கையில் பத்திரமாக இருக்கும்.
அந்த வகையில் உங்கள் கைகளில் இருக்கும் அந்த பத்திர ஆவணங்களை மட்டும் வைத்துக் கொண்டு எவ்வாறு பட்டாவை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது என்பது குறித்து தெளிவாக பார்க்கலாம், முக்கியமாக கையில் இருக்கும் ஆவணம் பழைய ஆவணங்களாக இருக்க கூடாது, புதிய புல எண்கள் அப்டேட் செய்யப்பட்ட புதிய ஆவணமாக இருக்க வேண்டும்.
சரி, எப்படி பட்டாவை பதிவிறக்கம் செய்வது?
1) முதலில் அந்த இடத்திற்காக சொத்து ஆவணங்களை கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்,
2) அதில் இருக்கும் புல எண் மற்றும் உட்பிரிவு எண்களை தனியாக எழுதி வைத்துக் கொள்ள வேண்டும்,
3) பின்னர் https://eservices.tn.gov.in/eservicesnew/index.html இந்த லிங்கை க்ளிக் செய்து முகப்பு பக்கத்திற்கு சென்று கொள்ள வேண்டும்,
4) அந்த முகப்பு பக்கத்தில் 'View Patta / Chitta / FMB' என்று ஒரு ஆப்சன் இருக்கும்,
5) அந்த ஆப்சனை க்ளிக் செய்ததும் இன்னொரு பக்கம் வரூம், அதில் மாவட்டம், தாலுகா, கிராமம், புல எண் உள்ளிட்டவைகள் அனைத்தும் கேட்கும்,
6) இது போக உங்கள் மொபைல் எண்ணும் கொடுக்க வேண்டும், அதற்கு ஒரு OTP வரும், இந்த தகவல் அனைத்தும் உள்ளிட்டதும், உங்களது பட்டா PDF பார்மட்டில் பதிவிறக்கம் செய்யப்படும்,
7) உங்களுடைய நிலத்திற்கான மேப் (FMB) அப்லோட் செய்யப்பட்டு இருந்தால் மேப்பும் சேர்ந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.