• India
```

ஒரு நிமிடத்தில் வில்லங்க சான்று...எப்படி ஆன்லைனில் எடுப்பது என்று பார்க்கலாம்...!

How To Download EC Online Tamil

By Ramesh

Published on:  2024-11-27 16:43:16  |    315

How To Download EC Online Tamil - ஒரு நிமிடத்தில் ஆன்லைனில் வில்லங்க சான்று எப்படி பதிவிறக்கம் செய்வது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

How To Download EC Online Tamil - ஒரு இடத்தை வாங்க நினைக்கிறீர்கள், வாய் வார்த்தையாக அந்த இடம் குறித்து விற்பவர்கள் நிறைய சொல்லி இருப்பார்கள், ஆனால் அது பத்தவில்லை அந்த இடம் அல்லது இடத்தின் உரிமையாளர்கள், முந்தைய உரிமையாளர்கள் குறித்து, நீங்கள் அதிகாரப்பூர்வ தகவல்களை தெரிந்து கொள்ள நினைக்கிறீர்கள் என்றால் அதற்கு தான் வில்லங்க சான்று (EC-Encumbrance Certificate) என்பது மிக மிக அவசியம், 

முன்பெல்லாம் ஒரு வில்லங்க சான்று வாங்குவதற்கு ரிஜிஸ்டர் ஆபிஸ்சில் எழுதி கொடுத்து, காத்திருந்து, அவர்கள் அதை அலுவலகம் முழுக்க தேடி எடுத்து வில்லங்க சான்று நம் கைக்கு வருவதற்கு எப்படியும் ஒரு அரை நாள் ஆவது ஆகி விடும், அந்த அளவிற்கு வில்லங்க சான்று பெறுவதில் அவ்வளவு சிரமம் இருந்து வந்தது, ஆனால் தற்போது அப்படி இல்லை ஆன்லைனிலேயே பதிவிறக்கம் செய்ய முடியும்.



சரி எப்படி வில்லங்க சான்றிதழ் ஆன்லைனில் எடுப்பது?

1) முதலில் (https://tnreginet.gov.in/portal/index.jsp#) இந்த லிங்கிற்குள் நேரடியாக சென்று கொள்ளுங்கள்,

2) இல்லையேல் https://tnreginet.gov.in என்ற லிங்கை க்ளிக் செய்து, மின்னனுசேவைகள் என்ற ஆப்சனின் கீழ், வில்லங்க சான்று -> வில்லங்க சான்று விவரம் பார்வையிடுதல் என்ற ஆப்சனை க்ளிக் செய்யவும்,

3) உங்களிடம் புல எண், உட்பிரிவு எண் இருக்கும் பட்சத்தில் நேரடியாக மண்டலம், மாவட்டம், சார்பதிவாளர் அலுவலகம், புல எண், உட்பிரிவு எண் என அனைத்தையும் கொடுத்து தேடுக என்ற ஆப்சனை கொடுக்க வேண்டும்,

4) பின்னர் உங்களுக்கான வில்லங்க சான்று பக்கத்தில் காண்பித்திடும், நீங்கள் அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்,

5) நிறைய புல எண்களைச் சார்ந்த உட்பிரிவு எண்களுக்கு EC எடுக்க நினைக்கிறீர்கள் என்றால் புல விவரங்களின் கீழ் சேர்க்க (Add) என்றதொரு ஆப்சன் இருக்கும் அதை பயன்படுத்துக் கொள்ளலாம்.

6) ஆவணங்களே உங்கள் கைகளில் இருந்தால் ஆவண வாரியாகவும் வில்லங்க சான்றையும் தேடிக் கொள்ளலாம், அதற்கு ஆவண வாரியாக என்றதொரு ஆப்சனும் கொடுக்கப்பட்டு இருக்கும்.

7) ஒரு சில இடங்களுக்கு 1975 மற்றும் அதற்கு பின் பதிவு செய்யப்பட்ட விவரங்கள் மட்டுமே ஆன்லைனில் கிடைக்கின்றன, அதற்கு முன்னதான விவரங்கள் வேண்டும் எனில் மண்டல சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று மட்டுமே பெற முடியும்.

Harmful Effects of Drinking Coca Cola
Information

Harmful Effects of Drinking Coca Cola