• India
```

மின்னனு ரேசன் அட்டை தேவையா..2 நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..!

How To Download E Ration Card Online

By Ramesh

Published on:  2024-11-03 22:26:48  |    600

How To Download E Ration Card Online - மின்னனு ரேசன் கார்டு TNPDS அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் எப்படி பதிவிறக்கம் செய்வது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

How To Download E Ration Card Online - பொதுவாக மின்னனு ரேசன் கார்டு என்பது ஒரு அதிகாரப்பூர்வ கிட்டதட்ட ஸ்மார்ட் கார்டுக்கு நிகரான ஒரு Proof ஆக பார்க்கப்படுகிறது, அது எதற்கெல்லாம் தேவைப்படும் என்பதை முதலில் பார்க்கலாம், நீங்களை ஸ்மார்ட் கார்டை தொலைத்து இருக்கலாம், இல்லையேல் எங்காவது மறந்து வைத்து இருக்கலாம், அவ்வாறாக இருக்கும் பட்சத்தின் இந்த மின்னனு கார்டின் நகல் மூலம் நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் வாங்கி கொள்ளலாம்.

புதிய ஸ்மார்ட் கார்டுக்காக விண்ணப்பம் செய்து இருப்பீர்கள், அது எல்லா இடங்களிலும் கையொப்பம் ஆகி அப்ரூவ் ஆகி ஸ்மார்ட் கார்டு பிரிண்டிங் நிலையில் இருக்கும், ஆனால் அந்த பிசிக்கல் கார்டு உங்கள் கைகளில் வந்து சேர குறைந்த பட்சம் 30 நாட்கள் அல்லது அதற்கு மேலும் ஆகலாம், அதுவரையில் நீங்கள் நியாய விலைக் கடைகளில் பொருட்களை வாங்க, இதர ஏதாவது சான்றிதழ்களுக்கு Proof ஆக இந்த மின்னனு அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம்.



சரி, தற்போது மின்னனு அட்டை எப்படி எடுப்பது என்பது குறித்து பார்க்கலாம்?

1) முதலில் TNPDS யின் அதிகாரப்பூர்வ தளமான https://www.tnpds.gov.in/home.xhtml என்ற தளத்திற்குள் உள்நுழைந்து கொள்ளவும்,

2) பின்னர் பயனாளர் நுழைவு (Citizen Login) என்ற பட்டனை க்ளிக் செய்யவும்,

3) உங்கள் ஸ்மார்ட் கார்டில் நீங்கள் கொடுத்த மொபைல் எண் மற்றும் கேப்டாச்சாவை உள்ளிடவும்,

4) உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு 7 இலக்கம் கொண்ட கடவுச்சொல் வரும் அதையும் உள்ளிட்டு அடுத்த பக்கத்திற்கு செல்லவும்,

5) உங்களது கார்டின் முழுமையான விவரம் அந்த பக்கத்தில் வரும், அதில் என் விவரம் (My Profile) என்ற ஆப்சனை க்ளிக் செய்யவும்.

6) மின்னனு அட்டை கோப்பு பதிவிறக்கம் (Smardt Card PDF Download) என்ற ஆப்சனை க்ளிக் செய்யும் பட்சத்தில் உங்களது E Ration Card பதிவிறக்கம் ஆகி விடும்.

Harmful Effects of Drinking Coca Cola
Information

Harmful Effects of Drinking Coca Cola