• India

தங்க நகைக்கடனை...குறைந்த வட்டியில் முடிப்பது எப்படி...?

Closing Gold Loan With Low Interest

By Ramesh

Published on:  2024-12-25 00:04:46  |    747

Closing Gold Loan With Low Interest - பொதுவாக தங்கநகைக்கடன் என்பது தங்க நகையை அடமானம் வைத்து வங்கிகளில் பெறப்படும் கடன் தொகை ஆகும், மிக எளிமையான ஆவணங்களுடன் உடனடியாக கிடைக்கும் கடன் வகைகளுள் தங்க நகைக்கடன் இருக்கிறது. நகையை பிளக்சிபில் ஆக ஒரு வருடத்திற்குள் திருப்பிக் கொள்ளும் ஆப்சனும் இருப்பதால் பெரும்பாலானோர் நகைக்கடனை நோக்கி செல்ல செல்கின்றனர்.

வட்டியும் மற்ற கடன்களை விட கம்மி என்பதாலும், எளிதான முறையில் பெற முடியும் என்பதாலும் தங்க நகை மூலம் கடன் பெறுபவர்களின் எண்னிக்கை கிட்டதட்ட 41% உயர்ந்து இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது, அந்த வகையில் குறைந்த வட்டியில் தங்க நகைக்கடனை எவ்வாறு முடிப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.



கடந்த செப்டம்பர் 2024 யில் ரிசர்வ் வங்கி, தங்க நகைக்கடன் குறித்த ஒரு விவர அறிக்கை வெளியிட்டு இருந்தது, அதாவது தங்க நகைக்கடன் பெறுபவர்களும் இனி மாதத்தவணை மூலம் தங்களது தங்க நகைக்கடனை அடைக்க வழி வகை செய்ய வேண்டும் என வங்கிகளுக்கு உத்தரவு இட்டு இருந்தது, வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் இப்படி ஒரு திட்டம் இருப்பதை அறிவுருத்தவும் வலியிருத்தி இருந்தது.

பொதுவாக ஒரு 1 இலட்சம் தங்கநகைக்கடன் 10% வட்டிவீதத்தில் பெறுகிறோம் என்றால், வருடத்தில் 10,000 வட்டி வீதம் வரும், அதுவே நாம் மாதத்தவணையில் ஒரு குறிப்பிட்ட தொகை மூலம் 12 மாதத்தில் அக்கடனை கட்டி முடிக்கும் போது அந்த வட்டி என்பது 5,800 ரூபாய் தான், இந்த வகையில் மாதத்தவணை மூலம் தங்க நகைக் கடனை நாம் அடைத்திடும் போது கிட்டத்தட்ட 4200 ரூபாய் வீதம் வட்டி குறைகிறது.

" ஒரு சிலருக்கு பிளக்சிபில் திட்டம் சரியாக தெரியலாம், ஒரு சிலருக்கு மாதத்தவணை சரியாக தெரியலாம், ஆதலால் இரண்டு முறைப்படியும் தங்கநகைக்கடனை செயல்படுத்த வங்கிகள் முடிவெடுத்து இருக்கின்றன "