• India
```

அதிக ஸ்பேம் கால் வருதா?..இது பண்ணா போதும் இனி வராது!!

How To Block Spam Calls

By Dhiviyaraj

Published on:  2025-01-26 12:40:59  |    30

இந்தியாவில் அரசு, பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் ஸ்பேம் கால்ஸ் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.

இந்தியாவில் அரசு, பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் ஸ்பேம் கால்ஸ் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. இருப்பினும், ஸ்பேம் கால்ஸ் மற்றும் மோசடி அழைப்புகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கின்றன. எனவே, அவற்றை 24 மணி நேரத்தில் தடுக்கும் வழிகளை பார்ப்போம்.

ஸ்பேம் அழைப்புகளை தடுக்கும் முறைகள்:

*உங்கள் கால் ஹிஸ்டரியில் இருக்கும் சந்தேகத்திற்குரிய எண்ணை நீண்ட நேரம் அழுத்தவும்.

*அதன் பிறகு 'தடு/ஸ்பேமைப் புகாரளி' (Block/Report Spam) என்பதை தேர்வு செய்யவும்.

*சில ஸ்மார்ட்போன்களில் Google Phone app மூலம் தானாகவே ஸ்பேம் எண்கள் அடையாளம் காணப்படும்.

ஸ்பேம் எஸ்எம்எஸ்களை நிரந்தரமாக தடுக்க:

*ஸ்பேம் என சந்தேகிக்கும் ஒரு எஸ்எம்எஸை நீண்ட நேரம் அழுத்தி மேலே தோன்றும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்யவும்.

*அதில் 'தடு' (Block) அல்லது 'Report Spam' என்பதை தேர்ந்தெடுக்கவும்.

*Play Store-ல் கிடைக்கும் Truecaller, Hiya போன்ற பயன்பாடுகளை பயன்படுத்தி கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தலாம்.

இந்த எளிய வழிமுறைகள் மூலம் ஸ்பேம் அழைப்புகளையும், எஸ்எம்எஸ்களையும் உடனடியாக தடுத்து, பாதுகாப்பாக இருக்கலாம்.

Harmful Effects of Drinking Coca Cola
Information

Harmful Effects of Drinking Coca Cola