How To Become A Successful YouTuber - இங்க எல்லாருக்குமே ஆழ்மனசுல யூடியூபர் ஆகனும்னு ஆசை இருக்கும், எப்படி வெற்றிகரமான யூடியூபர் ஆகுறது, எப்படி நல்ல கன்டன்ட் தேர்வு செய்யுறதுன்னு இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
How To Become A Successful YouTuber - முன்பெல்லாம் சினிமா, சீரியல் என்ற இரண்டு தளங்கள் மூலம் ஆக மட்டும் தான் ஒருவர் பிரபலம் ஆக முடியும், ஆனால் தற்போது சோசியல் மீடியாக்கள், யூடியூப்கள் என ஒருவர் பிரபலம் ஆவதற்கு பல தளங்கள் இருக்கின்றன, இப்போதைக்கு சிறந்த யூடியூபர் ஆகுவது எப்படி என்பது குறித்து மட்டும் இங்கு விரிவாக பார்க்கலாம்.
உங்களை அறிதல்
பொதுவாகவே உங்களுக்கு என்ன தெரியும், நீங்கள் எதில் வலிமையானவர்கள் என்பதை முதலில் நீங்கள் அறிந்து இருப்பது அவசியம், நன்றாக காமெடி ஸ்க்ரிப்ட் எழுதுவீர்கள் என்றால், ஏதாவது ஒரு காமெடி சேனல்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு நீங்கள் உங்களது கிரியேட்டிவான விஷயங்களை புகுத்தி வீடியோவாக பதிவு செய்யலாம், 100 சதவிகிதம் உங்களது கன்டன்ட் ஆக இருப்பது அவசியம்.
ட்ரென்டிங்கை அறிதல்
பொதுவாக சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம், ட்விட்டர், பேஸ்புக்கில் எந்த விடயம் டிரென்டிங்காக பிரதிபலிக்கிறதோ அது தான் யூடியிபிலும் பிரதிபலிக்கும், ஆதலாம் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பது மிக மிக அவசியம், இது போக கூகுள் ட்ரெண்ட்ஸ் என கூகுளில் டைப் செய்து தேடினால் ஒவ்வொரு நிமிடமும் என்ன ட்ரெண்ட் ஆகிறது என்பது குறித்த தகவல் கிடைக்கும், அதன் அடிப்படையிலும் வீடியோக்களை பதிவிடலாம்.
லாங் டர்ம் கன்டன்ட்
பொதுவாக யூடியுபில் ஒரு இரண்டு வருடத்திற்கு முன்பு பதிவிட்டு இருந்தாலும் இப்போதும் பார்க்கப்படுகிற டாபிக்குகள் இரண்டு தான் ஒன்று சமையல், இன்னொன்று கல்வி தொடர்பான வீடியோக்கள், நீங்கள் இந்த இரண்டில் ஏதாவது ஒன்றில் வலிமையானவர்கள் என்றால் தைரியமாக யூடியூப் சேனலில் வெல்லலாம், பொதுவாக உங்கள் கன்டன்டுக்காக எவ்வளவு முயற்சி போடுகிறீர்களோ அதே அளவிற்கு எடிட்டிங்கிலும் முயற்சியை போட வேண்டும்.
தம்ப்னைல் (முன்பக்க காட்சி புகைப்படம்) முதல் வீடியோவின் கடைசி முடிவு வரை ஒரு வீடியோவில் என்ன என்ன இருக்க வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்ய வேண்டும், ஏதாவது ஒரு பிரபல யூடியூபரை வேண்டுமானால் எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் என்ன வீடியோ பதிவிட்டாலும் அது இணையத்தில் அதிகமாக தேடப்படும் கன்டன்டாக இருக்க வேண்டும், அதற்கு தான் ட்ரென்டிங்கை அறிவது என்பது மிக மிக அவசியம்.
கல்வி சம்பந்தப்பட்ட வீடியோ எனில் நீங்கள் எந்த சப்ஜெக்டில் மிகவும் வலிமையானவர்களோ அது சம்பந்தமான வீடியோக்களை வீடியோக்களை பதிவிடலாம், உதாரணத்திற்கு நீங்கள் கணிதத்தில் வலிமையானவர் என்றால் அரசு தேர்வுகளுக்கு ஏற்ப திறனறிவு டாபிக்குகளை பதிவிடலாம், பள்ளி புத்தகங்களில் இருக்கும் பயிற்சி கணக்குகளை சால்வ் செய்து பதிவிடலாம், அறிவியலில் வலிமை எனில் தினம் ஒரு அறிவியல் உண்மைகளை போட்டு உடைக்கலாம் நல்ல ரீச் இருக்கும்.
இன்று சமையல் வீடியோக்கு இருக்கும் மவுசு வேறு எந்த வீடியோக்கும் இருப்பதில்லை, சட்னி வைப்பதில் இருந்து பிரியாணி எப்படி வைப்பது என்பது வரை அனைத்தையும் யூடியுபில் தான் தேடுகிறார்கள், தினசரி வீட்டில் மூன்று முறை சமையல் நடக்கும், அந்த சமையலை ஏதாவது வித்தியாசமான முறையில் கேமராவில் பதிவிட்டு, ஒரு கன்டன்டாக தொகுத்து வீடியோவாக பதிவிட்டால், அதற்குமே நல்ல லாங்டர்ம் ரீச் இருக்கும்,
" நீங்கள் மற்றவர்களைக் காட்டிலும் எப்படி வித்தியாசமாக யோசிக்கிறீர்கள் என்பதுதான் உங்களை சிறந்த யூடியூபராக மாற்றும், சிறந்த கன்டன்ட், சிறந்த எடிட்டிங், சிறப்பான தொகுப்பு, அதிகமாய் தேடப்படும் விடயம் இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு உங்களது வீடியோக்களை உருவாக்கினால் நீங்களும் நாளைய யூடியூப் பிரபலம் தான் "