இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையாக உள்ள தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை பெற, உங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வது அவசியம்.
இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையாக உள்ள தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை பெற, உங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வது அவசியம்.
வாக்காளர் அடையாள அட்டை, வாக்களிப்பதற்கே பல்வேறு அரசு மற்றும் தனியார் சேவைகளில் அங்கீகரிக்கப்பட்ட அடையாள ஆவணமாகவும் பயன்படுகிறது. புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம் மற்றும் திருத்தங்களைச் செய்வது எப்படி என்பது பற்றிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.
வாக்காளர் அடையாள அட்டைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
நீங்கள் வீட்டிலிருந்தபோதே ஆன்லைன் மூலம் எளிதாக வாக்காளர் அடையாள அட்டைக்காக விண்ணப்பிக்கலாம்.
*அதிகாரப்பூர்வ வாக்காளர் சேவை இணையதளத்தின் சேவையான https://voters.eci.gov.in/ என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
*‘பதிவுபெறு’ (Register) என்பதை தேர்வு செய்து, உங்கள் மொபைல் எண்ணை வழங்கி OTP மூலம் உள்நுழையவும்.
*'படிவம் 6' (Form 6) என்ற விருப்பத்தை தேர்வு செய்து, தேவையான தகவல்களை நிரப்பவும்.
*ஆதார் கார்டு, பிறப்புச் சான்றிதழ், முகவரி சான்று போன்ற தேவையான ஆவணங்களுடன் உங்கள் புகைப்படத்தையும் பதிவேற்றவும். விண்ணப்பத்தை உறுதிப்படுத்தி சமர்ப்பிக்கவும்
அனைத்து தகவல்களும் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து, 'Submit' பொத்தானை அழுத்தவும்.விண்ணப்ப நிலை குறித்து பின்னர் அதே இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.