How To Apply Passport Online Tamil - பாஸ்போர்ட்டிற்கு பதிவு செய்வது ஏதோ கடினமான காரியம் என்று அனைவரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள், அதை 5 நிமிடத்தில் பதிவு செய்வது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
How To Apply Passport Online Tamil - தற்போதெல்லாம் வெளிநாட்டிற்கு வேலை நிமித்தம் செல்பவர்கள், படிப்பு நிமித்தம் செல்பவர்கள், சுற்றுலா நிமித்தம் செல்பவர்கள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றனர், அந்த வகையில் ஒன்றிய அரசு பாஸ்போர்ட்டை ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கும் வகையில் வழிவகை செய்து இருக்கிறது, பலரும் தற்போது ஆன்லைனிலேயே பதிவு செய்து பாஸ்போர்ட்டை சுலபமாகவும் பெற்றும் வருகின்றனர். எப்படி ஆன்லைனில் எளிதாக பதிவு செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான ஆவணங்கள்
1) ஆதார் கார்டு அனைத்து தகவலும், முகவரியும் சரியாக இருக்க வேண்டும், பிறந்த தேதி தந்தையின் பெயர், என அனைத்தும் பிறப்பு சான்றிதழ் மற்றும் உங்கள் மார்க் ஷீட்களுடன் ஒத்துப்போக வேண்டும், ஏதாவது ஒன்று மிஸ் மேட்சிங் எனில் அதை சரி செய்து கொள்வது நல்லது.
2) பிறப்பு சான்றிதழ், படித்த மார்க்ஷீட் உள்ளிட்ட ஆவணங்களையும் வைத்துக் கொள்வது நல்லது.
எப்படி பதிவு செய்தது?
பார்ட் 1:
1) முதலில் இந்த https://www.passportindia.gov.in/AppOnlineProject/welcomeLink# இந்த இணையதளத்திற்குள் சென்று கொண்டு New Registration என்ற ஆப்சனை க்ளிக் செய்யவும்.
2) பாஸ்போர்ட் ஆபிஸ், பெயர், பிறந்த தேதி, ஈமெயில் ஐடி, மொபைல் நம்பர், பாஸ்வேர்டு, ஹிண்ட் கேள்விரி என சாதாரண ஒரு சில விடயங்களை தான் கேட்கும். User ID யாக நீங்கள் உங்களது ஈமெயில் ஐடியை தேர்வு செய்து கொள்ளலாம்.
3) எல்லா தகவல்களையும் உள்ளிட்ட பின்பு ரிஜிஸ்டர் என்ற ஆப்சனை க்ளிக் செய்யவும்.
4) பின்னர் உங்களது அதிகாரப்பூர்வ மெயிலை ஓபன் செய்து அக்கவுண்ட் ஆக்டிவேசனுக்காக வந்திருக்கும் மெயிலை க்ளிக் செய்யவும்.
5) க்ளிக் செய்து விட்டு உங்களது User Id மற்றும் நீங்கள் உள்ளிட்ட Password யை கொடுத்தால் அக்கவுண்ட் ஆக்டிவேட் ஆகிவிட்டு பாஸ்போர்ட்டிற்கான விண்ணப்பமும் வந்து விடும்.
பார்ட் 2:
1) பின்னர் உங்களது அக்கவுண்ட்டிற்குல் லாக் இன் பண்ணி சென்றதும் Apply For Fresh Passport என ஒரு ஆப்சன் இருக்கும்.
2) Click Here To Fill The Application Form என்ற ஆப்சனை க்ளிக் செய்யவும்.
3) State, District, Apply For Fresh Passport என வரிசைய உள்ளிட்டு விட்டு, உங்களுக்கு பாஸ்போர்ட் அவசர்ம் இல்லையென்றால் Type Of Application யில் Normal என உள்ளிட வேண்டும்.
4) அவசர தேவை என்றால் தட்கல் பிரிவை க்ளிக் செய்ய வேண்டும்.
5) புக்லெட் டைப் உங்களது தேவைக்கு ஏற்ப 36 அல்லது 60 பக்கத்தை தெரிவு செய்து கொள்ளலாம்.
6) பின்னர் நெக்ஸ்ட் க்ளிக் செய்து மறுபடியும் பெயர், முகவரி, பிறந்த தேதி, வோட்டர் ஐடி, பான், ஆதார் உள்ளிட்ட தகவல்களை உள்ளிட்டு தகவல்களை சேமித்துக் கொள்ளவும்.
7) அடுத்தடுத்த பக்கங்களில் கேட்கப்பட்டு இருக்கும் பெர்சனல் தகவல்களை உள்ளிட்டு நெக்ஸ்ட் நெக்ஸ்ட் கொடுக்கவும்.
8) கேட்கும் ஆவணங்களை பதிவிட்டு, உங்கள் அருகில் இருக்கும் பாஸ்போர்ட் ஆபிஸ்சை உள்ளிட்டு, வெரிபிகேசனுக்கான தேதியை க்ளிக் செய்து, ஆன்லைனில் பேமெண்ட் செய்து விட விண்ணப்பம் நிறைவடைந்துவிடும்.
நார்மலுக்கும், தட்கலுக்கும் என்ன வித்தியாசம்
நார்மலாக நீங்கள் பாஸ்போர்ட்டுக்கு பதிவு செய்யும் போது உங்கள் கைக்கு பாஸ்போர்ட் வர கிட்ட தட்ட ஒரு மாதம் வரையில் ஆகலாம், தட்கல் முறையில் பதிவு செய்தால் பாஸ்போர்ட் உங்கள் கைகளில், 7 நாட்களுக்குள் கிடைக்கும் வாய்ப்பை பெறுவீர்கள், நார்மல் முறையில் பதிவிட விண்ணப்ப கட்டணம் 1500 ரூபாய், தட்கல் முறையில் விண்ணப்ப கட்டணம் 3500 ரூபாய் ஆகும்.