How To Apply For Unmarrried Certificate - முதல் திருமண சான்றிதழுக்கு எப்படி பதிவு செய்வது என்ன என்ன ஆவணங்கள் தேவைப்படும் என்பது குறித்து பார்க்கலாம்.
How To Apply For Unmarrried Certificate - திருமண சான்றிதழ் ஒருவர் எடுப்பதற்கும் அல்லது கோவில்களில் ஏதும் திருமணம் செய்ய வேண்டும் நினைத்தாலோ ஒருவர் திருமணமாகாதா சான்றிதழ் என்று அழைக்கப்படும் முதல் திருமண சான்றிதழ் எடுப்பது அவசியம், அதுவும் திருமணத்திற்கு முன்பாகவே எடுக்க வேண்டியது மிக மிக அவசியம், அது எடுக்கவில்லையெனில் திருமணத்தை பதிவு செய்ய கொஞ்சம் சிரமப்படும்.
சரி இந்த திருமணமாகாத சான்றிதழ் எனப்படும் முதல் திருமண சான்று பெறுவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம், ஆதார், மாற்று சான்றிதழ் அல்லது மார்க் ஷீட், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இதெல்லாம் உங்கள் கைகளில் இருக்கும் பட்சத்தில் நேரடியாக ஈ சேவை மையத்திற்கு சென்றோ அல்லது நீங்களாகவோ ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
சரி எப்படி பதிவு செய்வது?
1) மேற்கூறிய ஆவணங்கள் அனைத்தையும் JPG அல்லது PDF பார்மட்டில் 200KB க்குள் ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளுங்கள்,
2) உங்களது புகைப்படத்தை 50KB க்குள் ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்,
3) பின்னர் இந்த https://www.tnesevai.tn.gov.in/Default.aspx லிங்கிற்குள் சென்று User Name, Password உள்ளிட்டவைகளை கொடுத்து உள்ளே நுழைந்து கொள்ளவும்,
4) பின்னர் Rev பிரிவில் Rev 120 Unmarried Certificate என்ற பகுதியை க்ளிக் செய்யவும்,
5) பின்பு வரும் பக்கத்தில் உங்களது கேன் எண் அல்லது ஆதார் எண்ணை உள்ளிட்டு Search என்ற ஆப்சனை க்ளிக் செய்யவும்,
6) ஆதார் எண்ணை உள்ளிட்டு Search கொடுத்தால் உங்களது CAN எண் உங்களது விவரங்களுடன் வரும்,
7) க்ளிக் செய்து ஆதார், DOB, பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு வரும் OTP உள்ளிட்டவைகளை உள்ளிட்டு Confirm OTP என்ற ஆப்சனை க்ளிக் செய்யவும்,
8) உங்களுடைய தகவல் அதுவாக Show ஆகும் விவரங்களை சரி பார்த்து, அடுத்த பக்கத்திற்கு செல்லவும்,
9) கடைசியாக ஆவணங்கள் (ஆதார், TC அல்லது மார்க் ஷீட்) மற்றும் போட்டோ, Self Declaration Form உள்ளிட்டவைகளை அப்லோட் செய்து Payment கட்டி விட்டால் ஒப்புகை சீட்டி வரும்,
10) ஒரிரு நாட்களில் முதல் திருமண சான்றிதழ் எனப்படும் திருமணமாகாத சான்றிதழை நீங்கள் இணையத்திலேயே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்