How To Apply For Udyogini scheme Tamil - பெண் தொழில் முனைவோர்களுக்கு ரூபாய் மூன்று இலட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கும் உத்யோகினி திட்டத்திற்கு எப்படி பதிவு செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
How To Apply For Udyogini scheme Tamil - முதலில் உத்யோகினி திட்டம் என்பது வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கும் பெண் தொழில் முனைவோர்களுக்கு ரூபாய் 3 இலட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கும் ஒரு திட்டம் ஆகும். இந்த கடனுக்கு முப்பதாயிரம் வரை மானியமும் வழங்கப்படுகிறது, இத்திட்டத்தின் கீழ் டெய்லரிங், பேக்கரி, பலசரக்கு, கைவினைப்பொருள்கள் உற்பத்தி உள்ளிட்ட 88 தொழில்களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது.
சரி, இத்திட்டத்தின் கீழ் எப்படி இணைவது?
இத்திட்டத்தின் கீழ் இணைய மொத்தமாக இரண்டு வழிகள் இருக்கின்றன, முதலாவதாக உங்களது மாவட்ட தொழில்துறை மையங்களில் சென்று, ஆவணங்களை எல்லாம் சமர்ப்பித்து, உங்களது தொழில் சம்பந்தப்பட்ட திட்ட வடிவை எடுத்து உரைத்து, உங்கள் கடனுக்கான அனுமதி கடிதம் பெற்று, அந்த அனுமதி கடிதத்தை வங்கிகளிடம் கொடுத்து பின்னர் உத்யோகினி திட்டத்தின் கீழ் கடன் பெறலாம்.
இல்லை எனில் முதலில் வங்கிகளுக்கு நேரடியாக சென்று ஆவணங்களுடன் உங்களது தொழிலின் திட்ட வடிவத்தையும் விளக்கவும், உத்யோகினி திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பிக்கவும், அவர்களும் உங்களது விண்ணப்பத்தை மாவட்ட தொழில் அலுவலகத்திற்கு அனுப்பி அனுமதி கிடைத்த பின்னர் உங்களது கடனுக்கான தொகையை பரிசீலனை செய்வார்கள்.
தேவையான ஆவணங்கள் என்ன என்ன?
1) ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு,
2) உங்கள் தொழிலுக்கான திட்ட வடிவம்,
3) 3 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் உங்கள் தொழில் மையம் அல்லது நிறுவனத்தின் அருகில் நின்று எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம்,
4) வறுமைக்கோட்டின் கீழ் இருப்பதற்கான சான்று அல்லது வருமானச்சான்று
5) வங்கியின் பாஸ்புத்தகம்
இந்த ஆவணங்கள், நீங்கள் மாவட்ட தொழில் துறை அலுவலகத்திற்கு செல்லும் போதோ அல்லது வங்கிகளுக்கு செல்லும் போதோ கையில் நிச்சயமாக இருக்க வேண்டும், இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 3 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படும், தொழில்துறை அலுவலகத்திற்கு கடனை பரிசீலனை செய்ய மட்டுமே அனுமதி உண்டு, வங்கிகளே எவ்வளவு கடன் கொடுக்க முடியும் என்பதை தீர்மானம் செய்யும்.