Pradhan Mantri Ujwala Yojana - இலவச கேஸ் அடுப்புடன் இலவச கேஸ் கனெக்சனும் வழங்க கூடிய பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவிற்கு எப்படி பதிவு செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
Pradhan Mantri Ujwala Yojana - பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா என்பது ஏழை எளிய மக்களுக்கும், வீட்டில் கேஸ் கனெக்சன் இல்லாதவர்களுக்கும், இலவச கேஸ் அடுப்புடன் கேஸ் கனெக்சனும் வழங்க கூடிய ஒரு திட்டம் ஆகும், பொதுவாக ஒரு புதியதாக கேஸ் அடுப்புடன் கேஸ் கனெக்சன் எடுக்க வேண்டுமெனில் கிட்டத்தட்ட ரூ 3000 வரை தொகை கட்டினால் மட்டுமே கிடைக்கும்.
ஆனால் இத்திட்டத்தின் மூலம் பதிவு செய்கின்ற ஏழை எளிய மக்களுக்கும், கேஸ் கனெக்சனே இல்லாத வீடுகளுக்கும், கேஸ் அடுப்பும், கேஸ் கனெக்சனும், முதல் கேஸ்சும் இலவசமாக வழங்கப்படுகிறது, அதற்கு பின் அவர்கள் பதிவு செய்யும் ஒவ்வொரு கேஸ்சுக்கும் தனியாக மானியம் வழங்கப்படும், அந்த மானியம் ரூ 60 ரூபாயில் இருந்து 300 ரூபாய் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.
சரி இந்த பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவிற்கு எப்படி பதிவு செய்வது?
முதலில் உங்களிடம் ஆதார், வங்கி கணக்கு புத்தகம், வீட்டிற்கான வாடகை அல்லது சொந்த ஆவணம், எலக்ட்ரிக் பில் அல்லது உங்களுடைய சரியான முகவரியுடன் கூடிய ரேசன் கார்டு, வோட்டர் ஐடி உள்ளிட்ட ஆவணங்களை முதலில் சமர்ப்பித்தல் வேண்டும், உங்களுடைய ஆதாரில் வேறு ஏதும் ஆயில் நிறுவனங்களில் கேஸ் கனெக்சன் இருந்தால் நீங்கள் இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள் அல்ல.
மேற்கண்ட ஆவணங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதாவது கேஸ் நிறுவனத்திற்கு செல்லுங்கள், அவர்களிடம் பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டத்திற்கு பதிவு செய்ய வேண்டும் என கூறினால் பதிவு செய்து கொடுப்பார்கள், 20 முதல் 30 நாட்களுக்குள் உங்களது விண்ணப்பத்தின் உறுதி தன்மை ஆராயப்பட்டு உங்களுக்கு இலவச கனெக்சனும் கேஸ்சும் வழங்கப்படும்.
" நீங்கள் இத்திட்டத்திற்கு பதிவு செய்வது முதல் இத்திட்டத்தின் மூலம் இலவச கேஸ் மற்றும் கனெக்சன் பெறுவது வரை உங்கள் ஊரில் இருக்கும் ஏதாவது ஒரு கேஸ் நிறுவனத்திலேயே செய்து கொள்ளலாம், வேறு எங்கும் அழைய தேவை இல்லை "