• India
  • April 7, 2025 at 04:01:03 AM
```

ஒரு நிமிடத்தில் பான் கார்டு இலவசமாக வேண்டுமா...அப்ப இத பண்ணுங்க...!

How To Apply For PAN card

By Ramesh

Published on:  2024-10-15 14:47:51  |    617

How To Apply For PAN card - தற்போதெல்லாம் பான் கார்டுகள் எல்லாவற்றிற்கும் அவசியம் ஆகிறது, ஒரு அவசர தேவைக்கு உடனடியாக பான் கார்டு தேவைப்பட்டால் உடனடியாக 24 மணி நேரத்திற்குள் எப்படி பெறுவது என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

How To Apply For PAN card - ஏதோ ஒரு விடயத்திற்காக உங்களுக்கு இன்ஸ்டன்டாக பான் கார்டு தேவைப்பட்டால் அதை 24 மணி நேரத்திற்குள் எடுப்பதற்கு வாய்ப்பாக ஒரு அரசின் சார்பில் ஒரு இணையதளம் கொடுகப்பட்டுள்ளது, அதில் எப்படி பதிவு செய்வது, பான் நம்பர் எப்படி எடுப்பது, பான் கார்டை எப்படி பதவிறக்கம் செய்வது என்பது குறித்த தகவலை வரிசையாக பார்க்கலாம்.

முதலில் பான் கார்டுக்கு பதிவு செய்வது எப்படி என்று பார்க்கலாம்

1) முதலில் https://www.incometax.gov.in/iec/foportal/ இந்த லிங்கிற்குள் சென்று Instant E Pan ஆப்சனை க்ளிக் செய்துவிட்டு பின்னர் Get New e-PAN என்ற ஆப்சனை க்ளிக் செய்யவும்.

2) பின்னர் உங்களது 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடவும்.

3) ஆதார் எண்ணில் உள்ள மொபைல் நம்பருக்கு ஒரு ஒன் டைம் பாஸ்வேர்டு வரும்.

4) அதை உள்ளிடும் பட்சத்தில் உங்கள் ஆதாருடைய தகவல்கள் அதில் வரும்.

5) சரி பார்த்து விட்டு டிக் பாக்ஸில் டிக் செய்து விட்டு Continue ஆப்சனை க்ளிக் செய்ய வேண்டும்.

6) உங்களுடைய பெர்சனல் தகவல்கள் மீண்டும் சரி பார்க்கும் பொருட்டு காண்பிக்கப்படும்.

7) சரி பார்த்து விட்டு டிக் பாக்ஸில் மீண்டும் டிக் செய்து விட்டு Continue ஆப்சனை க்ளிக் செய்ய வேண்டும்.

8) அவ்வளவு தான் பான் கார்டுக்கான பதிவு முடிந்து விடும்.


சரி எப்படி பான் கார்டை டவுன்லோடு செய்வது

1) e-PAN க்கு பதிவு செய்துவிட்டு முதலில் ஒரு 10 நிமிடம் மட்டும் பொறுமை காக்கவும்.

2) பின்னர் https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற லிங்கிற்கு சென்று மறுபடியும் Instant E Pan ஆப்சனை க்ளிக் செய்யவும்.

3) Check Status/ Download PAN என்ற ஆப்சனை க்ளிக் செய்யவும்.

4) மறுபடியும் ஆதார் எண்ணை உள்ளிட்டு உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் OTP யை உள்ளிடவும்.

5)  Download e-PAN என்ற ஆப்சனை க்ளிக் செய்து உங்களது பான் கார்டின் நகலை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

" உங்களுக்கு அட்டையாக வேண்டும் பட்சத்தில் நீங்கள் பதிவிறக்கம் செய்த பான் கார்டின் டிஜிட்டல் நகலை ஜெராக்ஸ் கடைகளில் கொடுத்து அட்டையில் பதிவிட்டு பெற்றுக் கொள்ளலாம் "

Harmful Effects of Drinking Coca Cola
Information

Harmful Effects of Drinking Coca Cola