How To Apply For Income Certificate Online Tamil - தமிழக அரசின் பிரத்யேக இ சேவை தளத்தில் வருமான சான்றிதழுக்கு எப்படி பதிவு செய்வது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
How To Apply For Income Certificate Online Tamil - வருமான சான்றிதழ் என்பது தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெறுவதற்கும், ஒன்றிய அரசின் வேலைகளுக்கு பதிவு செய்வதற்கு மிக முக்கியமான சான்றிதழாக அறியப்படும், OBC சான்றிதழ் பெறுவதற்கும், மிக முக அவசியம் ஆகிறது, அத்தகைய சான்றிதழை எங்கும் அலையாமல் வீட்டில் இருந்தே பதிவு செய்து, மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் பெறுவது எப்படி என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
சரி வருமானச்சான்றிதழுக்கு எப்படி பதிவு செய்வது?
தேவையான ஆவணங்கள்: ஆதார் கார்டு, ரேசன் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, சுய ஒப்ப படிவம் (பதிவு செய்யும் முன்னதாகவே இ சேவை தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்), முக்கியமாக ரேசன் கார்டு மற்றும் ஆதார் கார்டில் உள்ள மொபைல் நம்பர், உள்ளிடப்பட்டு இருக்கும் மொபைல் கையில் இருப்பது அவசியம்.
பதிவு செய்வதற்கான படிநிலைகள்
1) https://www.tnesevai.tn.gov.in/citizen/ முதலில் இந்த லிங்கை க்ளிக் செய்து இந்த இணையதளத்திற்குள் செல்ல வேண்டும்,
2) உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கும் பட்சத்தில் ரிஜிஸ்ட்ரேசன் செய்ய தேவை இல்லை, நேரடியாக User ID, Password யை உள்ளிடலாம்.
3) நீங்கள் ரிஜிஸ்டர் செய்யவில்லை எனில், https://www.tnesevai.tn.gov.in/citizen/Registration.aspx இந்த லிங்கை க்ளிக் செய்து ரிஜிஸ்டர் செய்து கொண்டு பாஸ்வேர்டு, User Id யை பெற்றுக் கொள்ளவும்,
4) Dasboard யில் Department ஆப்சனில் Revenue Department ஆப்சனை க்ளிக் செய்து REV-103 வருமானச் சான்றிதழ் என்ற ஆப்சனை க்ளிக் செய்யவும்.
5) அதற்கு பின் CAN நம்பர் என்ற ஆப்சன் கேட்கும், உங்களிடம் இருந்தால் உள்ளிடவும், இல்லையேல் ஆதார் நம்பரை உள்ளிடும் பட்சத்தில் உங்கள் ஆதாரில் இருக்கும் மொபைல் நம்பருக்கு ஒரு OTP வரும், உடனடியாக CAN நம்பர் கிடைத்து விடும்,
6) CAN ரிஜிஸ்டர் செய்ததுமே உங்களது பெர்சனல் தகவல்கள் எல்லாம் ஆட்டோமேட்டிக்காக Save ஆகி விடும்,
7) பின்னர் குடும்ப உறுப்பினர்கள், அவர்களது வருமானத்தை பதிவிட்டு சப்மிட் கொடுத்து விட்டு கேட்கப்படும் ஆவணங்களை அப்லோய் செய்தால் பிராசஸ் முடிந்து விடும்.
" குறைந்தபட்சம் மூன்று முதல் ஐந்து நாட்களில் நீங்கள் உங்களது வருமான சான்றிதழை ஆன்லைனிலேயே பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும், உங்களுக்கு மிக மிக அவசரம் என்றால், அப்ளை செய்ததும், உங்களது கிராம நிர்வாக அதிகாரியை சந்தித்து உங்களது அப்ளிகேசன் நம்பரை சொன்னால் அவர் RI க்கு அப்ளிகேசனை பார்வேர்டு செய்வார், RI யிடம் சென்று முறையிட்டால் அவர் தாலுக் ஆபிஸ்க்கு பார்வேர்டு செய்வார், நீங்கள் அங்கும் சென்று முறையிட்டால் ஒரே நாளில் பெற்று விடலாம், அவசரம் இல்லை என்னும் பட்சத்தில் ஒரு 3-5 நாட்கள் பொறுத்தால் கையெழுத்தாகி ஆன்லைனிலேயே வந்துவிடும், "