• India
```

மாணவர்களுக்கான...அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற வகை செய்யும்...முதல் பட்டதாரி சான்றிதழுக்கு...பதிவு செய்வது எப்படி...?

How To Apply For First Graduate Certificate

By Ramesh

Published on:  2024-12-11 16:54:42  |    241

How To Apply For First Graduate Certificate - தமிழக அரசின் பல்வேறு சலுகைகளை பெறும் வகையில் மாணவர்கள் முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

How To Apply For First Graduate Certificate - தமிழக அரசின் பல்வேறு கல்விக்கான நலத்திட்டங்களை பெறுவதற்கு முதல் பட்டதாரி சான்றிதழ் அவசியம் ஆகிறது, அவ்வாறாக முதல் பட்டதாரி சான்றிதழ் வைத்து இருப்பவர்களுக்கு மாத உதவித் தொகை மற்றும் படிக்கும் கல்விக்கட்டத்தில் ஒரு குறிப்பிட்ட மானியம், அது அரசு கல்லூரியாக இருந்தாலும் சரி, தனியார் கல்லூரியாக இருந்தாலும் சரி கட்டணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு அரசு உத்தரவாதம் அளிக்கும்.

முதலில் முதல் பட்டதாரி சான்றிதழ் என்பது என்ன?

முதல் பட்டதாரி சான்றிதழ் என்பது ஒரு குடும்பத்தின் முதல் பட்டதாரிக்கு வழங்கப்படும் ஒரு ஆவணம் ஆகும், இந்த ஆவணத்தின் கீழ் பல்வேறு கல்வி நலத்திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன, இத்திட்டத்தின் கீழ் பயன் பெற நினைப்பவரின் குடும்பத்தில் அவரைச் சார்ந்த அப்பா, அம்மா, ஏனைய குடும்ப உறுப்பினர் யாரும் பட்டதாரியாக இருக்க கூடாது, அவர் தான் அவரது குடும்பத்தின் முதல் பட்டதாரியாக இருக்க வேண்டும்.



சரி, முதல் பட்டதாரி சான்றிதழுக்கு எப்படி பதிவு செய்வது?

1) முதலில் உங்களிடம் ஆதார், கடைசியாக படித்த படிப்பின் மார்க் ஷீட், ட்ரான்ஸ்பர் சர்டிபிகேட், ரேசன் கார்டு, Self டிக்ளேரசன் பார்ம் உள்ளிட்டவைகள் இருக்கிறது என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்,

2) உங்களிடம் E Seva தளத்தில் ஐடி இருப்பின் https://www.tnesevai.tn.gov.in/Default.aspx என்ற தளத்திற்கு நுழைந்து Log In செய்து கொள்ள வேண்டும்,

3) பின்னர் வருவாய் துறையை க்ளிக் செய்து REV-104 First Graduate Certificate என்ற பகுதியை க்ளிக் செய்து கேட்கும் தகவல்களை உள்ளிடவும்,

4) பின்னர் ஆதார், கல்வி ஆவணங்கள், Self Declaration Form உள்ளிட்டவைகளை அப்லோட் செய்து கொண்டு அப்ளிகேசனை நிறைவு செய்யவும்,

5) மூன்று முதல் ஏழு நாட்களுக்குள் உங்களது அப்ளிகேசன் பரிசீலனை செய்யப்படும், Log In செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Harmful Effects of Drinking Coca Cola
Information

Harmful Effects of Drinking Coca Cola