• India

ஈ சேவை மூலம்...சிறு குறு விவசாயிகளுக்கான...உழவர் அட்டைக்கு பதிவு செய்வது எப்படி...?

How To Apply For Uzhavar Attai | Farmer ID Apply Online​

By Ramesh

Published on:  2025-01-09 13:33:51  |    331

How To Apply For Uzhavar Attai - பொதுவாக உழவர் அட்டையில் பலவித பயன்கள் உழவர்களுக்கு கிடைக்கின்றன, ஒருவர் உழவர் கார்டு வைத்து இருக்கும் பட்சத்தில் திருமண உதவித் தொகை, குறைந்த வட்டியில் விவசாயக்கடன், முதியோர் உதவித்தொகை, விபத்துக் காப்பீடு என பல திட்டங்களின் கீழ் பயன்பெற முடியும், இது போக அரசின் சொட்டு நீர் பாசனம், மானிய உரம் உள்ளிட்ட நன்மைகளையும் உழவர் அட்டையின் மூலம் பெற முடியும்,

பொதுவாக ஒரு விவசாயி உழவர் அட்டை பெற வேண்டும் எனில் முதலில் அவர் சிறுகுறு விவசாயியாக இருக்க வேண்டும், தோட்டக்கலை வைத்து இருப்பவர்களும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம், முக்கியமாக அவர்களுடைய நிலப்பரப்பு 5 ஏக்கருக்குள் இருக்க வேண்டும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்களுக்கு இந்த அட்டை வழங்கப்பட மாட்டாது.



சரி என்ன என்ன ஆவணங்கள் தேவைப்படும் என்றால், நிலம் நிச்சயம் உங்கள் பெயரில் இருக்க வேண்டும், அதற்குரிய பட்டா, சிட்டா, பத்திரம் என அனைத்திலும் உங்கள் பெயர் இருக்க வேண்டும், ஆதார் கார்டு, வங்கி பாஸ் புக், வில்லங்க சான்றிதழ், சமீபத்தில் எடுக்கப்பட்ட போட்டோ உள்ளிட்டவைகள் கையில் இருக்க வேண்டும், பட்டா கூட்டு பட்டாவாக இருந்தால் நிச்சயம் அடங்கல் இணைக்க வேண்டும், 

நீங்களாக பதிவு செய்ய போகிறீர்கள் என்றால் சுய போட்டோவை 50 Kb க்கு மிகாமல் ஸ்கேன் செய்து வைத்துக் கொண்டு, ஆவணங்கள் அனைத்தையும் 200 KB க்கு மிகாமல் ஸ்கேன் எடுத்து PDF பார்மட்டில் வைத்து கொண்டு E Sevai தளத்தில் Log In செய்து Revenue பகுதியில் REV-117 Small / Marginal Farmer Certificate என்ற பகுதியின் கீழ் பதிவு செய்ய வேண்டும்.

" அப்படி இல்லை என்றால் ஈ சேவை மையத்திலும் மேற்கண்ட ஆவணங்கள் அனைத்தையும் சரியாக எடுத்துச் சென்றால் அவர்களும் பதிவு செய்து கொடுப்பார்கள், முக்கியமாக மேற்கண்ட ஆவணங்கள் அனைத்தும் பதிவு செய்பவரின் பெயரில் சரியாக இருக்க வேண்டும் அப்படி இருக்கும் பட்சத்தில் 3 - 7 நாட்களுக்குள் உங்களது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும் "