How To Apply For Ayushman Health Card - பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா என்பது இந்தியாவில் இருக்கும் தகுதி வாய்ந்த ஒவ்வொரு குடிமக்களும் இத்திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ காப்பீட்டை, இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்து இருக்கும் அனைத்து மருத்துவமனைகளிலும் பெற முடியும், அறுவை சிகிச்சை, புற்று நோய், பைபாஸ் அறுவை சிகிச்சை உள்ளிட்ட மேஜர் சிகிச்சைகள் கூட இந்த காப்பீட்டின் மூலம் பெற முடியும்.
அதாவது இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பங்களுக்கும் வருடத்திற்கு ரூ 5 இலட்சம் மருத்துவக் காப்பீடு நிர்ணயிக்கப்படும், மற்ற தனியார் காப்பீடுகள் போல அல்லாமல் 70 வயதிற்கு அதிகமான மூத்த குடிமக்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும், இத்திட்டத்தின் கீழ் இணைபவர்களுக்கு ஒரு காப்பீடு அட்டை வழங்கப்படுகிறது, அதை வைத்தே இந்த காப்பீட்டை ஒருவர் பயன்படுத்த முடியும்.
சரி ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் கார்டு பெறுவது எப்படி?
1) ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் கார்டை பெறுவதற்கு முதலில் ஆதார் கையில் இருக்க வேண்டும்,
2) அதில் இருக்கும் அனைத்து விவரங்களும் சரியாக இருக்கிறதா என முதலில் செக் செய்து கொள்வது நல்லது,
3) முக்கியமாக முகவரி, பிறந்த தேதி, உங்கள் கையில் இருக்கும் மொபைல் எண் என அனைத்தும் சரியாக இருக்க வேண்டும்,
4) இவை அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில், ஆதாரில் கொடுத்து இருக்கும் மொபைல் எண் கொண்ட மொபைலும் உங்கள் கைகளில் இருக்கும் பட்சத்தில் நேரடியாக ரிஜிஸ்ட்ரேசனை துவங்கி விடலாம்,
5) முதலில் இந்த https://abha.abdm.gov.in/abha/v3/ லிங்கை க்ளிக் செய்து கொள்ள வேண்டும்,
6) Create ABHA Number என்ற ஆப்சனை க்ளிக் செய்யவும்,
7) பின்னர் Create ABHA Number Using Aadhar என்ற ஆப்சனை க்ளிக் செய்யவும்,
8) ஆதார் எண்ணை உள்ளிட்டு, Agree என கொடுத்து கேப்டாச்சைவை Fill செய்தால், ஆதார் மூலமாக உங்கள் அனைத்து தகவல்களும் பெறப்பட்டு, ஆட்டோமேட்டிக்காக ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் கார்டு க்ரியேட் ஆகி விடும்.
9) அதை PDF ஆக பதிவிறக்கம் செய்து கொண்டு, பிளாஸ்டிக் கார்டாக ஜெராக்ஸ் கடைகளில் அடித்துக் கொள்ளலாம்.