Health Insurance Exclusions - பொதுவாக மருத்துவக்காப்பீடு வைத்து இருப்பவர்கள், எந்தெந்த விடயங்கள் மருத்துவக்காப்பீட்டிற்குள் அடங்காது என்பதை அறிந்திருக்க வேண்டும், அது என்ன என்ன விடயங்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Health Insurance Exclusions - பொதுவாக மருத்துவக்காப்பீடு என்ற பெயரில் ஒரு சிலர் 1 கோடிக்கு எல்லாம் போட்டு வைத்து இருப்பார்கள், ஆனால் எந்த எந்த விடயங்கள் எல்லாம் மருத்துவக்காப்பீட்டிற்குள் உள்ளடங்கும் என தெரியாமலே அதை பயன்படுத்தி வருவார்கள், ஏதாவது ஒரு சூழலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது தான் காப்பீடு எது எதற்கு கிடைக்காது என்பது தெரிய வரும். .
ஒரு சிலர் எல்லாம் அவ்வாறான இக்கட்டான சூழலில் மாட்டிக் கொண்டு காப்பீடு கிடைக்காமல், கையில் இருக்கும் காசை போட்டு மருத்துவத்தில் சிக்கிக்கொள்கின்றனர். ஆதலால் உங்களிடம் மருத்துவக்காப்பீடு இருக்கிறது என்றால் அது எந்தெந்த விடயங்களுக்கு செல்லுபடியாகும், எந்தெந்த விடயங்களுக்கு செல்லுபடியாகாது என்பதை ஒவ்வொருவரும் நிச்சயமாக அறிந்திருத்தல் அவசியம்.
சரி, மருத்துவக்காப்பீடு எந்தெந்த விடயங்களுக்குள் உள்ளடங்காது?
1) காப்பீடுக்கு முன்னதாகவே உள்ள சர்க்கரை நோய், இதயநோய் உள்ளிட்டவைகளுக்குள் மருத்துவக் காப்பீடு அடங்காது, நீங்கள் அந்த நோய்களுக்கும் காப்பீடு கோரவேண்டும் எனில் அதற்கு குறைந்தபட்சம் 1-3 வருடங்கள் வரை காத்திருப்பு காலம் என்பது இருக்கும்.
2) நேச்சுரோபதி, அக்குபஞ்சர், மேக்னடிக் தெரபி, அக்குபிரஷர் உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு மருத்துவக் காப்பீடு பெறமுடியாது, ஆனாலும் ஆயுர்வேதம், ஹோமியோபதி சிகிச்சைகளுக்கு காப்பீடு வழங்கப்படும்.
3) பிளாஸ்டிக் அறிவை சிகிச்சை, முகமாற்று அறுவை சிகிச்சை, முடி திருத்த அறுவை சிகிச்சை உள்ளிட்டவைகள் எல்லாம் மருத்துவ காப்பீட்டிற்குள் அடங்காது.
4) சுயமாக நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளும் காயங்களும், தற்கொலைக்கு முயற்சித்து அனுமதிக்கப்படும் சிகிச்சை முறைகள் ஆகியவவைகள் எல்லாம் மருத்துவக் காப்பீட்டிற்குள் அடங்காது.
5) காப்பீடு நீங்கள் துவங்கியதும் உடனடியாக செய்யப்படும் சிகிச்சை முறைகள் காப்பீட்டில் அடங்காது, குறைந்த பட்சம் ஒரு மாதம் முதல் மூன்று மாதம் காப்பீடு துவங்க காலம் ஆகலாம்.
6) ஆனாலும் விபத்துக் காப்பீடு மட்டும் நீங்கள் காப்பீடு துவங்கிய அடுத்த நாளில் இருந்து துவங்கி விடும்.
" ஒரு பாலிசி துவங்கும் முன்னதாக, அந்த பாலிசி எதற்காக பயன்படும், எதற்காக எல்லாம் பயன்படாது என்பதை எல்லாம் பாலிசி துவங்குபவர்கள்கள் தெரிந்திருப்பது அவசியம், பாலிசி நிறுவனங்களும் அதை எல்லாம் பாலிசி போடுபவர்களிடம் நிச்சயம் சொல்ல வேண்டும், காப்பீடு தாரர்கள் ஏதாவது அவசர நிலையில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க பாலிசி குறித்த அனைத்து விடயங்களையும் தெரிந்து வைத்திருப்பது நிச்சயம் அவசியம் "