• India
```

கட்டாயம் இதை பண்ணா போதும் மாரடைப்பு வராது.. எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானம்!!

health benefits in tamil

By Dhiviyaraj

Published on:  2025-01-20 14:41:47  |    60

30 வயதுக்கு மேற்பட்ட பல ஆண்கள் செரிமான குறைபாடுகள், மலச்சிக்கல், வாயு, அஜீரணம் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

கொரோன காலகட்டத்திற்கு பிறகு பல இளைஞர்கள் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். நமது உடலை சரியாக கவனித்துக்கொள்ளவில்லை என்றால் நமக்கு பல பிரச்சனைகள் ஏற்படுத்தும். மருந்தை உணவாக எடுக்காமல் உணவை மருந்தாக எடுத்துக்கொள்வது சிறந்ததது.

30 வயதுக்கு மேற்பட்ட பல ஆண்கள் செரிமான குறைபாடுகள், மலச்சிக்கல், வாயு, அஜீரணம் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இந்த சமாச்சாரத்தை சமாளிக்க வெண்டைக்காய் தண்ணீர் ஒரு இயற்கையான தீர்வாக செயல்படுகிறது. தினசரி வெண்டைக்காய் நீரைச் செலுத்தும் பழக்கத்தால், செரிமானக் குறைபாடுகள் குறைந்து, மலச்சிக்கல் நீங்கும்.


வெண்டைக்காய் தண்ணீர் குடிப்பது செரிமானத்தைக் கட்டுப்படுத்தி, உடலில் தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. இது நீர் சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் கொண்டதால், செரிமான முறையை மென்மையாக செயல்படச் செய்யும்.

நோய் எதிர்ப்பு சக்தி:

உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கும் வெண்டைக்காய் நீர் உறுதுணையாக செயல்படுகிறது. இதில் ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின் சி, மற்றும் ஃபிளாவனாய்டுகள் அதிக அளவில் உள்ளன. இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பல்வேறு தொற்றுகளிடமிருந்து பாதுகாக்க உதவுகின்றன.

வெண்டைக்காய் நீர் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்து, உடல் நலம் மேம்பட உதவுகிறது. இதன் மூலம் சாதாரண சளி, காய்ச்சல் போன்ற அன்றாட நோய்களைத் தவிர்க்க முடியும். 30 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் தினமும் வெண்டைக்காய் நீர் குடிக்கத் தொடங்கினால், அவர்களின் உடல்நலம் உறுதியானதாக இருக்கும்.

Harmful Effects of Drinking Coca Cola
Information

Harmful Effects of Drinking Coca Cola