Harmful PFOA Non Stick Tawas - நான் ஸ்டிக் தவா அடிக்கடி பயன்படுத்திகிறீர்கள் என்றால் நிச்சயம் இந்த தொகுப்ப முழுசா படிங்க.
பொதுவா எல்லோரோட சமையல் அறையிலையுமே நான்ஸ்டிக் தோசைக்கல், நான்ஸ்டிக் தவா, நான் ஸ்டிக் பாத்திரங்கள்னு ஏதாச்சு ஒன்னு இருக்கும், பொதுவா தோசை ஒட்டாம வரதுக்கும், குழம்புகள் பாத்திரத்தில் ஒட்டாமல் இருப்பதற்கும், கரை பிடிக்காம இருப்பதற்கும் என ஒரு சில காரணங்களுக்காக பயனர்கள் நான் ஸ்டிக் தவாக்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
சரி அப்படின்னா இந்த நான்ஸ்டிக் தவால தான் இவ்ளோ நன்மைகள் இருக்கே அப்புறம் ஏன் பயன்படுத்தக் கூடாதுன்னா, இந்த பாத்திரங்கள் நான்ஸ்டிக் ஆகுறதுக்காக அதுல ஒரு கெமிக்கல் கோட்டிங் சேர்ப்பாங்க, அதுக்கு பேரு பெர் ப்ளுரோ ஆக்டனோயிக் ஆசிட் (PFOA) அப்படின்னு பெயர், பொதுவா இந்த கெமிக்கல அழியாத வரம் கொண்ட கெமிக்கல்னு (Forever Chemical) பொதுவா சொல்லுவாங்க,
இந்த கெமிக்கல் மனித உடலுக்குள் செல்லும் போது, அது மனித உடலியலின் ஒருங்கமைவை பல வகைகளில் பாதிக்குமாம், இந்த PFOA என்ற கெமிக்கல் கேன்சர், பிறப்பில் பாதிப்பு, கரு பாதிப்பு, கல்லீரல் பாதிப்புகள், தைராய்டு போன்ற பாதிப்புகளையும் மனிதர்களுக்கு ஏற்படுத்த வல்லதாம், அதனால் தான் நான் ஸ்டிக் தவா மற்றும் நான் ஸ்டிக் சார்ந்த பொருள்களை பயன்படுத்துவது கெடுதலாக பார்க்கப்படுகிறது.
இந்த விடயம் குறித்து நெட்ப்ளிக்ஸ் நிறுவனமும், ஏற்கனவே கடந்த 2018 யில் 'Dark Waters' என்ற டாகுமெண்ட்ரி எடுத்து இந்த PFOA குறித்து விளக்கி இருக்கும், தற்போதும் அந்த டாகுமெண்ட்ரி நெட்ப்ளிக்ஸ்சில் இருக்க தான் செய்கிறது, சரி இதற்கு மாற்று தான் என்ன என்றால் நான்ஸ்டிக்கை தவிர்த்து இரும்பு தோசை கல்கள், அலுமினிய சில்வர் பாத்திர வகைகளை பயன்படுத்தலாம்.
" தற்போது நான்ஸ்டிக்கிற்கு மாற்றாக செராமிக் நான்ஸ்டிக் பாத்திரங்கள், PFOA Free நான்ஸ்டிக் தவாக்கல், தோசைக்கல்கள் எல்லாம் வந்து இருக்கின்றன, அதையும் பயன்படுத்தலாம் "