Gram Suraksha Scheme Details Tamil - கிராம் சுரக்ஷா யோஜனா என்பது கிட்டத்தட்ட ஒரு அஞ்சலக காப்பீட்டு திட்டம் போல தான், இத்திட்டத்தின் கீழ் 19 வயது முதல் 55 வயது வரை யார் வேண்டுமானாலும் இணையலாம், இத்திட்டத்தின் கீழ் சரியான வகையில் சேமிப்புகளை கையாள்பவர்கள், ரிட்டனாக 35 இலட்சம் மற்றும் அதற்கு அதிகமாகவும் பெற கூடிய வகையில் இத்திட்டத்தை அஞ்சலக துறை வடிவமைத்து இருக்கிறது.
சரி எப்படி 35 இலட்சம் கிடைக்கும் என்றால், இத்திட்டத்தின் கீழ் நீங்கள் 19 வயதில் இணைகிறீர்கள் என வைத்துக் கொள்வோம், உங்களுக்கு மூன்று சாய்ஸ்கள் கொடுக்கப்படும், அதாவது உங்கள் காப்பீட்டு தொகையை, முதிர்வு தொகையை பெறுவதற்கான காலத்தை நீங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம். 55 வயது, 58 வயது, 60 வயது என மூன்று பிரிவுகளில் காலத்தை நிர்ணயித்து இருக்கின்றனர்.
நீங்கள் 19 வயதில் காப்பீட்டை துவங்கி 55 வயதில் ப்ரீமியம் கட்டி முடிக்கிறீர்கள் என்றால், மாத ப்ரீமியம் ரூ 1,515 கட்ட வேண்டி இருக்கும், இவ்வாறாக நீங்கள் சரியாக ப்ரீமியத்தை கட்டி முடிக்கும் போது உங்களது காப்பீட்டின் முடிவில் உங்களுக்கு 31 இலட்சம் கையில் கிடைக்கும், ப்ரீமியத்தை உங்களுக்கு ஏற்ப மாதமாக, காலாண்டாகவோ, அரையாண்டாகவோ, அல்லது வருடத்திற்கு ஒரு முறையோ கட்டிக் கொள்ளலாம்,
நீங்கள் 19 வயதில் காப்பீட்டை துவங்கி 58 வயதில் ப்ரீமியம் கட்டி முடிக்கிறீர்கள் என்றால் என்றால் மாத ப்ரீமியம் 1,463 ரூபாயும், 60 வயதில் ப்ரீமியம் கட்டி முடிக்கிறீர்கள் என்றால் என்றால் மாத ப்ரீமியம் 1,411 ரூபாயும் கட்ட வேண்டி இருக்கும், இத்திட்டத்தின் இன்னொரு சிறப்பம்சம் நீங்கள் கட்டும் ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் 60 ரூபாய் வருடாந்திர முடிவில் போனஸ் ஆக வரவு வைக்கப்படும்.