Government 1000 Rupees Scheme Apply Online - 30 வித்தியாசமான தொழில் துறைகளில் 400 தொழில்களில் பணியாற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களை இ-ஷ்ரம் போர்ட்டலில் சுய அறிவிப்பின் அடிப்படையில் பதிவு செய்ய முடியும்.
Government 1000 Rupees Scheme Apply Online -மத்திய அரசு ஏழைகளின் நலனுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும், அந்த வரிசையில், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக ஒரு தனிப்பட்ட திட்டமும் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு அளிப்பதற்காக மத்திய அரசு "இ-ஷ்ரம் யோஜனா" என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இ-ஷ்ரம் போர்ட்டல் மூலம், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வீட்டு வேலைகாரர்கள் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவு செய்ய வழிவகுக்கப்பட்டுள்ளது.
மேலும், 30 வித்தியாசமான தொழில் துறைகளில் 400 தொழில்களில் பணியாற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களை இ-ஷ்ரம் போர்ட்டலில் சுய அறிவிப்பின் அடிப்படையில் பதிவு செய்ய முடியும். இ-ஷ்ரம் போர்ட்டலின் முக்கிய நோக்கம், ஆதாருடன் இணைக்கப்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்களின் தேசிய தரவுத்தளத்தை உருவாக்குவது மற்றும் அவர்களுக்கு சமூக பாதுகாப்பு, நலன்புரி திட்டங்களை எளிதாகப் பெறச் செய்வதும் தான்.
மத்திய அரசின் "இ-ஷ்ரம் யோஜனா" என்ற திட்டத்தின் கீழ், இ-ஷ்ரம் போர்ட்டலில் பதிவு செய்யும் தொழிலாளர்களில் விவசாயத் தொழிலாளர்கள், பால் விவசாயிகள், காய்கறி மற்றும் பழங்கள் விற்பனையாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், செங்கல் சூளை தொழிலாளர்கள், மீனவர்கள், கட்டிடம் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள், வீட்டு வேலைகாரர்கள், முடி திருத்துபவர்கள், செய்தித்தாள் விற்பனையாளர்கள், ஆட்டோ டிரைவர்கள், தெரு வியாபாரிகள் மற்றும் பலரும் இடம்பெறுவார்கள்.
இ-ஷ்ரம் கார்டு பெறுவதற்கு, இருக்க வேண்டிய தகுதிகள், முதலில் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.மேலும், 18 வயதுக்கு மேல் மற்றும் 59 வயதுக்குள் இருப்பது முக்கியமான ஒன்றாகும். இந்த திட்டத்தின் நன்மைகள், மாதாந்திர நிதி உதவியாக மாதம் ரூ.1,000. மற்றும் மருத்துவக் காப்பீடு ரூ.2 லட்சம் வரை.மேலும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாதம் ரூ.3,000 பென்சன்.விபத்துக் காப்பீடு மற்றும் அடல் பென்சன் யோஜனா நற்பெயர் கொண்ட திட்டங்கள் ஆகியவை ஆகும்.
எனவே, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பரந்த அளவிலான நலன் மற்றும் பாதுகாப்பு சாத்தியங்களை வழங்குவதும், மற்றும் அவர்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தவும் இந்த திட்டம் மிகவும் உதவியாக இருக்கிறது.